பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


9.பார்ப்பானும் பசுக்களும்

சொல்லும் பொருளும்

பேசிப் பொழுதைப்போக்கி பெருமைப்பட்டுக் கொள்கின்ற மக்களே, இந்த உலகத்தில் பெரும்பகுதி இடங்களைப் பிடித்துக் கொண்டு வாழ்கின்றனர்.

அழகான பேச்சு, ஆரவாரமான பேச்சு, அடுக்குமொழிப் பேச்சு, அகங்காரப் பேச்சு, அடுத்தவரை மட்டந்தட்டும் பேச்சு, வெற்றுப் பேச்சு, வீண்பேச்சு என்று அவர்களது பேச்சுகள் பல வகைப்படும்.

எந்த மாதிரிப் பேசினாலும், செய்கின்ற செயல்களில் செழுமை ஏற்படுவது போன்ற கடமைமிகு காரியங்கள் ஆற்றவேண்டும் என்ற நியதியை, எல்லோருமே எதிர்பார்க்கிறோம்.

ஆனால், தான் செய்கின்ற காரியம், கடமை போன்றவற்றை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, மற்றவர்கள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, ஒதுங்கி ஓரங்கட்டிக் கொள்கின்ற வஞ்சக மனம் கொண்டவர்களாகவே மக்கள் வாழ்கின்றார்கள்.

அதாவது, பொறுப்பைக் கழித்துவிட்டு, பிறர் மேல் சார்த்திவிட்டு. தான் இன்பம் காணுகின்ற தன்மை தான், மனித இயல்பாக மாறி மாறி வந்திருக்கிறது.

இந்த நிலையை, கிராமப்பழமொழி ஒன்று சிறப்பாக எடுத்துரைக்கும்.