பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இவற்றையே காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம் என்பார்கள்.

காற்றும் களிப்பும்

பசுக்களை பகைகளிலிருந்து காப்பாற்ற, மேய்ப்பவன் மேற்கொள்கின்ற முயற்சிகளை நாம் அறிவோம்.

ஐம்புலன்களை அடக்கி, மேய்க்கின்ற ஆற்றல் ஒவ்வொரு பார்ப்பானுக்கும் உண்டு.

அந்த ஆற்றலை உண்டு பண்ணுவது காற்று, அதாவது உயிர்க் காற்றாகும். அதைத் தான் பிராணவாயு என்கிறோம்.

இந்த நாளில், நாம் உடற்பயிற்சி என்று சொல்கிறோமே, அதன் உண்மையான நோக்கம் என்னவென்றால், உயிர்க் காற்றை அதிகமாக நுரையீரலுக்குள் எடுத்துக் கொண்டு, இரத்த ஓட்டத்தை வேகமாக்கி, புலன்களை சிறப்பாகப் பணியாற்றச் செய்வதுதான்.

இதைத்தான், விஞ்ஞான பூர்வமான உடற்பயிற்சி என்று, நம் காலத்தவர் கூறுகின்றனர்.

பத்துவகைக் காற்று

நாம் உள்ளே இழுக்கின்ற காற்றானது, பத்து வகைக் காற்றாகப் பிரிந்து, பத்து வகை நரம்புகளுக்குள் புகுந்து, பக்குவமாகப் பணியாற்றுகின்றன என்று, இன்று கண்டு வெளியிடுகின்ற விஞ்ஞானிகள் கருத்தை, திருமூலர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே திருவாய் மலர்ந்தருளிச் சென்றிருக்கிறார்.

அந்த பத்து வகைக் காற்றுகளின் பெயர்களைப் பாருங்கள். உயிர்க்காற்று (பிராணன்), மலக்காற்று (அபானன்), தொழிற்காற்று (வியானன்), ஒலிக் காற்று (உதானன்) நிரவுக் காற்று (சமானன்), தும்மற் காற்று