பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


நாமும் நல்ல சக்தியுள்ளவர்களாக, சாதனையாளர்களாகத் திகழவேண்டுமானால், பாற்பசுபுலன்களை, பத்திரமாகப் பாதுகாத்து வாழவேண்டும்.

இன்பம் எனும் பாலை, குடங்குடமாய், கொட்டுகின்ற பசுக்களை, நாம் போற்றி வாழவேண்டாமா!

அதற்குத்தான் அந்தக் காலத்திலே யோகப் பயிற்சிகள் என்று செய்து மகிழ்ந்தார்கள். செம்மையான தேகத்துடன் வாழ்ந்தார்கள்.

இன்று நாம், புதிய கருவிகளுடன், உடற்பயிற்சி என்று செய்து வருகிறோம்.

செய்கின்ற பயிற்சிகளை சிறப்பாக நினைத்து, செழிப்போடு கற்று, நெடுநாளைக்குச் செய்து, தினம் செய்து, மனதுக்குள் போற்றி, சக்தியை வளர்த்து, முனைப்புடன் நம்பிக்கையுடன் வாழ்ந்து, நலங்கள் பெறுவோமாக!

பார்ப்பானாக பசுக்களைக் காப்பவனே உலக வாழ்க்கையை அளவின்றித் துய்த்து அகம் மகிழ்கிறான்.

துர்ப்பானாக, புலன்களை அழித்துத் தீர்ப்பானாக வாழ்பவனோ, தீய்ந்து, தேய்ந்து, நலிந்து, மலிந்து, நடைப் பிணமாக வாழ்கிறான்.

நாம் புலன்கள் எனும் பசுக்களைக் காத்து இவ்வுலக வாழ்வை சிறப்புற வாழ்வோமாக!