பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

79




10. காயமும் சகாயமும்



இந்திய நாட்டு மக்களுக்கு, குறிப்பாக, தமிழ்நாட்டு மக்களுக்குத் தனியான குணம் ஒன்று உண்டு. அது, சந்தோஷம் வரும்போது, எல்லாவற்றிற்கும் தானே காரணம் தன்னால் தான் முடியும் முடிகிறது. ஏற்படுகிற முடிவும் அப்படித்தான் என்று தலைநிமிர்த்திப் பேசுகின்ற தங்கமான குணம்.


கஷ்டம் என்று வந்துவிட்டால், காரணம் நானல்ல, கடவுள்தான். விதிவந்து விளையாடி விட்டது. வேதனைப் படுத்திவிட்டது. விவகாரத்தை சிக்கலாக்கி விட்டது, சீரழித்து விட்டது. சிதைந்து போனதால் அநேக சித்ர வதைகளையும் அனுபவிக்க நேரிட்டது என்று, அழுது புலம்பி, அக்கம்பக்கம் உள்ளவர்களின் அனுதாபத்தைத்தேடி அரவணைத்துக் கொள்கின்ற அளவுக்கு ஆடித் தீர்த்து விடுகின்ற அலங்காரமான குணம்.


ஆக, அவர்களுக்கு வேதாந்தமும் விதியும் வந்து கைகொடுத்து, தமது குற்றங்களை, குப்பையான காரணங்களைக் கொண்டு மூடிவிடும் கலாச்சாரப் பண்பு நிறையவே உண்டு. அப்படி நான், எனது தவறுகளை சுட்டிக் காட்டாமல் எப்போதும் தப்பித்துக் கொள்ள முயற்சிப்பதில்லை. முயற்சிக்க முயல்வதுமில்லை. முயன்றதுமில்லை.


விளையாட்டுநூல்களை எழுதி, பதிப்பித்து வெளியே கொண்டு வர முடியாதபடி, நான் அலைந்து திரிந்தது தான். அதற்குக் காரணம். வலைகள் இல்லை. ஆனால் அதில்