பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


சிக்கிக் கொண்டேன். தடைகள் இல்லை. ஆனால் அவற்றைத் தாண்ட முடியவில்லை. சிக்கல் இல்லை. ஆனால் அவற்றிலிருந்து எனக்கு தெளிவு பெற முடியவில்லை. தெரியவும் இல்லை.

அப்படியொரு சூழ்நிலை இருந்தது. இன்று எல்லாவற்றிலிருந்தும் வெளியேறி இயல்புநிலைக்கு வந்துவிட்டேன். கஷட காலத்தில் பேசுகின்ற பேச்சும், பாடுகிற பாட்டும் வேதாந்தம் என்றேனே! அந்தப் பாட்டு இதுதான். 'காயமே இது பொய்யடா! வெறும் காற்றடைத்த பையடா!’

சிந்தை தெளிந்தவர்களைத்தான் சித்தர்கள் என்று அழைத்தார்கள். சித்தம் தெளியாதவர்களை, பித்தர் என்று அழைத்தனர். சித்தர்களா காயமே இது பொய்யடா என்றனர்? உலகே மாயம் என்றது ஆச்சரியமாக இல்லையா நமக்கு!

காயமே இது மெய்யடா என்றுதானே அவர்கள் பாடியிருக்க வேண்டும்! காற்றடைத்த பையடா என்று பாடிய அந்த சித்தர், காயத்தை மெய் என்று தானே கூறியிருக்க வேண்டும்!

உடம்பை மெய் என்றுதானே கூற வேண்டும்! இந்த உலக வாழ்க்கையை நன்றாக வாழ்ந்து செல்ல உடம்புதானே உதவுகிறது. உடம்பே பொய்யென்றால், வாழ்க்கையை எப்படி உணர்ந்து வாழ முடியும்?

உடம்பின்மேல் நம்பிக்கையிருந்தால் தானே செய்யும் செயல்களில் தெளிவு இருக்கும். சேரும் சிந்தனைகளில் சிலிர்ப்பு இருக்கும்! நடக்கும் நடையில் நம்பிக்கை இருக்கும். முடிக்கும் காரியங்களில் முதிர்ச்சி இருக்கும். மேலாண்மையும் பிறக்கும்.