பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



ஆக, காயம் என்றால் மூலதனம். ஆமாம், பொன் பொருள் போல சொத்து சுகம் போல தேகம் இருக்கிறது. அதனால்தான், உண்டாக்கும் சக்தியும், உருவாக்கும் ஆற்றலும் கொண்ட தேகத்தை நாம் மெய் என்கிறோம்.


காய் + அம் என்று காயத்தை நாம் பிரிக்கலாம். 'அம்' என்றால் அழகு 'காய்' என்றால் காய்த்திருப்பது என்று பொருள்.


காய்த்திருக்கும் ஓர் அழகைத்தான் காயம் என்றார்கள். இந்தக் காயை பை என்கிறார்கள். ஆமாம் காற்றடைத்த பை என்றார்கள். பை என்றால் அழகு என்று அர்த்தம். காயாக இருக்கும் நமது உடல் அழகு தானே. பை என்பதும் மெய்தானே!


காய் நாளாக நாளாகக் கனிந்து கொண்டு வந்தால் தான் அதை கனி என்கிறோம். பழம் என்கிறோம். அதுபோலவே, காயம் இருக்கிறது. இளமைக் காலத்திலிருந்து முதுமை அடைகிற வரை தேகமானது அழகாக ஆற்றலுடன் இருக்கிறபோதுதான் அதை பழம் என்று கூறுவார்கள்.


ஆனால் நாம் முதியவர்களை பழம் என்று அழைப்பதில்லையே! கிழம் என்றுதானே அழைக்கிறோம்! அப்படியென்றால் கிழம் என்று அழைக்கப்படுபவர்கள், தாங்கள் வாழ்ந்த காலத்திலிருந்து முதுமைவரை அறிவால் அழகால் அனுபவத்தால் ஆற்றலால் அருமைபெருமைமிகுந்த திறமைகளால் சிறப்பாக முதிரவில்லை என்றுதானே அர்த்தம்!


மனிதர்கள் பலர், தன் தேகத்தை காயாக மட்டுமே வைத்துக் கொண்டு வாழ்கின்றனர். அவர்கள் தங்கள் காயத்தை காய்தலுக்கு மட்டுமே, ஆளாக்கிக் கொண்டு வாழ்க்கையை நடத்துகின்றனர்.