பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

87




ஆனால், நம்மிடையே நடைபயிலும் மக்களை நாம் மூன்று வகையாகப் பிரித்துப் பார்க்கலாம்.

1. ஒரு காரியத்தில் ஈடுபட்டு பாடுபட்டு, உருவாக்கி, நிகழ்ச்சியாக, காட்சியாக, சமுதாயத்தில் செய்து காட்டுகின்ற செயல்வீரர்கள், உலக சரித்திரத்தினைப் படைக்க முயலும் உருவாக்கிகள் இவர்கள்.

2. ஒரு காரியத்தை சாதிப்பவர்களைப் பார்த்து, தாங்களும் அதுபோல செய்திட சிந்தையில் விருப்பப்பட்டு, தங்கள் வாழ்விலே ஒரு சில திருப்பங்களை உண்டாக்கப் பார்க்கும் வேகம் உள்ளவர்கள் தாகம் நிறைந்தவர்கள் இவர்கள்.

3. யார் எதைச் செய்தாலும், எது நடந்தாலும், அதைப் பார்த்துப் பார்த்து ஆச்சரியப்பட்டு, பிறகு அந்த இடத்தை விட்டு அகன்றதும் அனைத்தையும் மறந்து ஆசுவாசப்படுத்திக் கொள்கிற மக்கள்.

ஆக, ஒரு சிலர் உருவாக்க, ஒரு சிலர் பார்த்து மகிழ வேறு சிலர் வியப்பினால் மலைத்து நெகிழ இப்படி நாம் மக்களைப் பிரித்துப் பார்க்கலாம்.

ஒரு சிலருக்குத்தான் உண்டாக்க முடியுமா, உருவாக்க முடியுமா, என்றால் எல்லோராலும் முடியும். எல்லோருக்கும் முடியும். ஏனென்றால் பிறந்த மக்கள் எல்லோருமே மனதாலும் உடலாலும் வல்லவர்களாகத் தான் பிறந்து வாழ்கின்றார்கள்.

சுற்றுப்புற சூழ்நிலைகள் தாம் மக்களை முற்றிலும் மூடர்களாக, மிருகத்திலும் கீழர்களாக, அறிவு நிலை ஜீவிகளாக வாழும்படிச் செய்து விடுகின்றன. ஆக, முயற்சித்தால் மேன்மை பெறலாம், முழுமை பெறலாம் என்ற