பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களின் தொகுப்பே இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்' என்னும் நூலாக உங்கள் கரங்களில் தவழ்கிறது.


டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா அவர்கள் பல்வேறு துறைகளைச் சார்ந்து நூல்களை எழுதி இருந்தாலும் அவருடைய உள்ளார்ந்த செயல்பாடுகள், நினைவு, ஆய்வு, செயல் அனைத்துமே விளையாட்டுத் துறை மற்றும் உடல்நலனில் இளஞர்களையும், பொதுமக்களையும் விழிப்புணர்வு பெறச் செய்வதே அவரது நோக்கமாக அமைந்திருந்தது.


பல்வேறு இலக்கியங்களில் உடல்நலம் பற்றிய கருத்துக்கள் எங்கெல்லாம் காணகிடக்கின்றன என்பதை தனக்கே உரிய இனிய எளிய தமிழ் நடையில் சுவையாக கூறி உடல் நலத்தின் மேன்மையையும் மனிதப் பிறவியின் முக்கியத்துவத்தையும் இந்த நூலில் கூறியுள்ளார்.


யார் நலமான உடலைப் பெற்றவர் என்பதற்கு, இரண்டே வரிகளில் பதிலலிக்கின்றார். யார் படுத்தவுடன் உறங்குகிறாரோ அவர் பாக்கியவான். யார் தூங்கி விழித்ததும் காலைக் கடனை முடிக்கிறாரோ அவரும் பாக்கியவான் என்கிறார்.


படுத்தவுடன் உறங்குகிறவருக்கு கவலைகள் கிடையாது. காலை எழுந்தவுடன் காலைக்கடனை முடிப்பவருக்கு உடலில் கோளாறுகள் கிடையாது. நல்ல மனமும், நல்ல உடலும் தானே மனித சமுதாயத்திற்கு இலக்கணம். இதையே பல்வேறு இலக்கியங்களும் நமக்கு உணர்த்துகின்றன என்பதையே இந்த நூல் சுவையாக படம்பிடித்து காட்டுகிறது.


சுவைத்து மகிழுங்கள்.


ஆர். ஆடம் சாக்ரட்டீஸ்


பதிப்பாசிரியர்