பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

89


 கொண்டிருக்கும். இது காலங்காலமாக தொடர்ந்து வருகிற கதைதான், கவிதை தான், காவியம்தான்.


நாற்றம் என்ற சொல் நறும்ணம் என்ற பொருளைத் தந்த காலம் மாறி, இன்று நாற்றம் என்றால் கெட்ட வாசனை, அதற்கும் மேல் துர் நாற்றம் என்று துரித கதியில் மாற்றம் பெற்றுப் போனதை இங்கே நினைவு படுத்துகிறேன்.


கரணம் என்றால் கல்யாணம், வதுவை என்று பொருள். இன்று பல்டியடிக்கின்ற குட்டிக்கரண வித்தை என்று மாறியது போலத்தான் ஈருயிரும் ஒருயிர் ஆகின்ற கதையும் ஆயிற்று.


ஈருயிர் என்றால் ஆண் உயிர் - பெண் உயிர் என்று இப்போது மாறிப் போயிருக்கிறது.


அன்று சொன்ன ஈருயிருக்கு அது அர்த்தமல்ல. அது மிகவும் அர்த்த முள்ளதாக ஆன்மீகம் மிகுந்த அர்த்தமாக இருந்தது.


ஈருயிர் என்பது ஆருயிர் பேருயிர் என்ற இருஉயிர்களாகும்.


ஆருயிர் என்பது ஆத்மாவாகும். பேருயிர் என்றால் பரமாத்மா என்று அர்த்தம்.


மனித உடலில் உள்ள ஜீவாத்மாவானது மறைந்து நம்முடனே நிறைந்து கிடக்கின்ற பரமாத்மாவுடன் ஒன்று கலந்திட முயற்சிப்பதைத்தான் ஈருயிர் ஒருயிர் என்றனர்.


இன்று, அந்த அருமையான கலப்பினை, தங்கள் சக்திக்கு ஏற்றாற்போல் கீழிறக்கி, பக்குவப்படுத்திக் கொண்டு தாங்கள் விரும்புகிற காதல் கலப்புக்கு கட்டியங் கூறி எடுத்துக் கொண்டனர்.