பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


அது போலவே, மூன்று மலங்களான முக்கிய குணங்களை, நாம் கட்டுப்படுத்தி வாழ்வதுதான் மனிதரான நமக்கு மகிமையாகும்.

நேரத்திற்கு ஏற்ப, நிதானத்தில் வைத்துக் கொண்டு, நெஞ்சத்தின் வேட்கையை நிலைப்படுத்திக் கொள்ள, நாம் முயல்கிறபோது, ஆருயிர் மகிழும். பேருயிரும் நமக்கு பரம திருப்தியை அளிக்கும்.

அதனால்தான், இறை பக்தியை சக்தி மிகுந்த செயல் என்கிறார்கள்.

பக்தி என்பது பெரிய கஷ்டமான செயல் என்பது பலர் எண்ணம். பக்தி என்பது நினைவுகளை ஒருமைப்படுத்துவது தான். ஒரு மனப்படுத்துதல் என்பது வேறொன்றுமில்லை.வைராக்யம்தான்.

வைராக்யம் என்பது உறுதி. நினைத்ததை நிறைவேற்ற உதவும் உத்வேகம். உற்சாகம். சுகப் பிரசவம்.

அப்படிப்பட்ட ஆழ்ந்த வைராக்யம் உள்ளவர்கள்தான் மத வாழ்வில் ஈடுபடுகிறபோது பக்தர்கள் ஆனார்கள். ஆய்வு நெறிக்குள் சென்றவர்கள் சித்தர்கள் ஆனார்கள். தர்மத்தைக் காக்க போனபோது வீரர்கள் ஆனார்கள். வாழ்க்கையில் வெல்லும்போது மகாத்மா ஆனார்கள். பேரும் பெருமையும் பெற்றார்கள்.

ஆக, ஆருயிரும் பேருயிரும் நம் வைராக்கியத்திற்குள் வந்து விடுகின்றன என்பதை மட்டும் இப்போது உணர்ந்து கொண்டு, நல்ல வைராக்யம் நமக்கு கிடைக்கின்ற நல்ல சிலாக்கியம் என்று முயல்வோம் மகிழ்வோம்.