பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

93


12. சுவாசமும் சுபாவமும்

நலமான வாழ்வையே நாம் நினைக்கிறோம். நலம் பெறவேண்டும் என்றே நாம் துதிக்கிறோம். அதையே யாசிக்கிறோம். ஆனால், அது எப்படி நடைபெறுகிறது. விடை தருகிறது என்று கொஞ்சமாவது யோசிக்கிறோமா!

இந்த உரையாடலில், உணர்வு பூர்வமாக நாம் யோசிக்கலாம்.

தாய் வயிற்றிலிருந்து, தரைப்பகுதியைத் தொட்ட நொடி முதல், ஒரு குழந்தையின் கடமையாக, கட்டாயமான காரியமாக இருப்பது மூச்சுவிட்டு, மூச்சை இழுப்பதுதான்.

தாய் வயிற்றுக்குள் சுகமாக இருந்தது, சொர்க்கத்திலே வாழ்ந்தது எல்லாம் மாறி, தரைக்கு வந்ததும், தானே தான் செய்ய வேண்டிய செயலாக அல்லவா இந்த சுவாசம் வந்து விட்டது.

இந்த தனிப் பெரும் செயலை, குழந்தைகள் செய்யக் கஷடப்படுகிறபோது தான், 'ஆ' வென வாயைப் பிளந்து, அழுது, பிராண வாயுவை பெரிதாக உள்ளே இழுத்துக் கொள்கிறது. இதையே, குழந்தைகள் இந்தக் கொடூரமான உலகுக்கு வந்துவிட்டது எனக் 'கோ' வென்று அலறுவதாகக் கூறுவார்கள் தத்துவவாதிகள்.

சுவாசத்தை செய்வதற்கு பிறந்த குழந்தைகள் பெரும் பிரயத்தனப் பட்டு அலறுகின்றன. அழுகின்றன என்பதுதான் உண்மை. பிறந்தது முதல் இறக்கிற வரை, இடைவிடாமல் செய்யப்படுகிற ஒரு காரியம் சுவாசம்தான்.