பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


காற்றை உள்ளே கொஞ்ச நேரம் அடக்கி வைத்திருப்பதற்கு கும்பகம் என்று பெயர். கும்பம் என்றால் நிறைத்து வைப்பது.

காற்றை வெளியே விடுவதற்கு இரேசகம் என்று பெயர்.

இப்படி காற்றைக் கட்டுப்படுத்துவதால் என்ன லாபம் என்றால், சுருக்கமாகவே சொல்லிவிடலாம்.

காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்கு
கூற்றை உதைக்கும் குறியதுவாமே!

கூற்று என்றால் எமன். எமனை எட்டி உதைத்துவிரட்டி, மரணத்தைத் தள்ளிப் போடுகின்ற, மாவலிமை நமக்கு கிடைத்து விடுகின்றது. இந்த திட்டமிட்ட சுவாசத்தால்தான் என்பதை மக்கள் புரிந்த கொண்டால் போதும்.

ஆழ்ந்த சுவாசத்தால், உடலுக்கு அழகு, ஆற்றல், ஆண்மை, அறிவு, மனபலம், தேகபலம், இளமையோடு பலகாலம் இருத்தல், முதுமையிலும் இளமையாக வாழுதல் எல்லாமே கிடைக்கிறது.

சுவாசம் சீராக சிறப்பாக நடைபெற்றால், சொர்க்கம், சுகம் என்கிறோம்.

சுவாசம் சீரழிந்து, சிறப்பிழந்து போனால் என்ன ஆகும்? உடல்நிலையே ஊறுபடும். கூறுபடும். உயிர்வேதனைபடும். ஓடோடிவந்து, ஓராயிரம் நோய்கள் கூடும். சாடும். உண்பதிலும், உடுப்பதிலும், உறங்குவதிலும் போன்ற முக்கியமான செயல்களில் கூட, இன்பம் மூளியாகிவிடும். வாழ்வே முடங்கிவிடும்.

உடம்பில் ஏற்படுகின்ற நோய்களை, பரிசோதித்துப் பார்த்துத் தான் தெரிந்து கொள்வார்கள் வைத்தியர்கள் என்பதெல்லாம் இந்நாளில் மாறிப்போய், ஒரு நோயாளியின்