பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

97


சுவாசக் காற்றை வைத்தே, கண்டுபிடித்து விடுகின்றார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

டைபாய்ட் நோயாளியிடமிருந்து வருகிற சுவாசக் காற்று, பேக்கரியில் ரொட்டி சுடும்போது ஏற்படுகிற வாசனையை ஒத்திருக்கும்.

மஞ்சள் காமாலை உள்ளவரின் சுவாச வாசனை, இறைச்சிக் கடையின் வாசனையைப் போல் இருக்கும்.

பெரிய அம்மை நோயாளியின் சுவாச வாசனை, வாத்திடமிருந்து வருகிற வாசனையைப் போல் இருக்கும்.

விளையாட்டு அம்மை என்று சொல்லக்கூடிய சின்ன அம்மை வந்த வியாதியஸ்தரின் சுவாச வாசனை, பறவை இறக்கையைப் பிடுங்கினால் வரும் வாசனையை நினைவூட்டும்.

நீரிழிவு நோயினால் நிலைகெட்டுக் கிடக்கிற நோயாளி யின் சுவாச வாசனை ஆப்பிளின் இனிமை வாசனை போல் இருக்கும்.

இவ்வாறு வியாதிக்காரர்களின் சுவாசக் காற்றை வைத்தே, அவர்களுக்குண்டாகியிருக்கும் சிறுநீர்க்கோளாறு, குடல் புற்றுநோய் முதலியவற்றைக் கண்டறியலாம் என்கிறது மருத்துவத்துறை.

ஆக, சுவாசம் எவ்வளவு சத்தானது, சக்திமிகுந்தது என்பது நமக்குப் புரிகிறதல்லவா!

சுவாசத்தின் வழியாக, நாம் நிறைய காற்றை உள்ளே இழுக்கிறபோது அதிலுள்ள உயிர்க்காற்றை சிவப்பு இரத்த அணுக்கள் பெற்றுக் கொண்டு, அதிவேகமாக உடலிலுள்ள எல்லா செல்களுக்கும் கொண்டு செல்கின்றன. இரத்தம் பெற்ற செல்கள் சிலிர்ப்படைகின்றன. செழிப்படைகின்றன.