239
இலக்கணக்கொள்கைகளே இனிது விளக்கி, மொழித் திறத்தினே முட்டறுத்து, இலக்கியச் செல்வங்களை இணைத்துக் காட்டி, தமிழ்ப் பண்பாட்டினையும் மரபினையும் விடாது குறிப்பிட்டு விளங்க உரைத்தவர்கள் உரையாசிரியர்களே யாவர். நூலாசிரியரின் உள்ளக்கருத்தினை நுண்ணிதின் உணர்ந்து, தொகுத்தும் வகுத்தும் விரித்தும் முறைப்படுத்தியும் தெளிவுபெற எடுத்தெழுதும் புலமை சான்றவர்களாய் உரையாசிரியர்கள் விளங்கினர். தாம் கற்றுத் துறைபோய துறைகளில் அமைந்துள்ள நூல்களுக்கு நல்லுரை கண்டனர். நடுவு கிலைமை: சான்ற நெஞ்சத்தோடு பல சமய உண்மைகளையும் கண்டு தெளிந்து உலக வழக்கும் உடன் உணர்ந்தவரா யிருந்தனர் உரையாசிரியர்கள். பல்கலைச் சிறப்பும், கல்வி கேள்விகளில் மேம்பாடுங் கொண்டு இவர்கள் நூல்களுக்கு உரை கண்ட சிறப்பால் இன்று புகழ்பூத்து நிற்கிறார்கள், தத்தமக்கே உரிய கடையினைக் கையாண்டு, தண்டமிழிற்குத் தளராது தொண்டாற்றிய நல்லராம் இடைக்கால உரையாசிரியர்களை இனி முறையே காண்போம்.
ஒல்காப் புகழ்த் தொல்காப்பியத்திற்கு உரைகண்ட பெருமக்கள் பலர்; இவர்களில் காலத்தால் முந்தியவர் இளம்பூரணர் ஆவர். இவர் ‘உரையாசிரியர்’ என்றே பின்வந்தோரால் சிறப்பாக அழைக்கப் பெறுகின்றார். இவரை மயிலநாதர் ‘உளங்கூர்க் கேள்வி இளம்பூரணர்’ என்றும், ‘ஓதமில் மாதவன்’ என்றும், இலக்கணக் கொத்து ஆசிரியர் ‘உளங்கூர் உரை ஆய் இளம்பூரணர்’ என்றும் சிறப்பித்துக் கூறியுள்ளனர். ‘இளம் பூரண அடிகள்’ என்றும் இவர் அழைக்கப்பெறுவது கண்டு இவரைச் சமணர் என்பர். ‘பிறர் உட்புகுந்து காண முடியாவண்ணம் இருண்டு கிடந்த தொல்காப்பியம்