பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

2

தமிழர் வரலாறு

“தமிழ்நாடு’ என்னும் தொடருக்குத் தமிழ்மொழி வழங்கும் நாடு என்பது பொருள். தமிழ்மொழி இன்ன காலத்திலேதான் தோன்றியதென்று எளிதாக வரை யறுத்துச் சொல்லக்கூடிய அளவிற்குப் பழைமை உடைய தாக இல்லை.

எனவே உலகில் இப்பொழுதுள்ள பல மொழிகளும் தோன்றுவதற்கு முன்பே தமிழ்மொழி தோன்றி வழங்கி வந்திருக்க வேண்டுமென்று ஆராய்ச்சியாளர் முடிவு கட்டு கின்றனர். இதல்ை தமிழ்மொழி தோன்றுவதற்கு முன்பே அம்மொழியினைப் பேசக்கூடிய தமிழ் முன்னேரும் -அவர் வாழ்ந்த தமிழ்நாடும் தோன்றியிருக்க வேண்டும். இதல்ை தமிழ் நாட்டின் பழைமை விளங்கும், மொழிகளைக் கொண்டு காடுகளுக்குப் பெயர் அமைப்பது முன்பு வழக்கமாக இருந்திருக்கிறது.

“ தமிழ் கூறு கல்லுலகம் ‘ என்று தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தில் வரும் தொடர் இவ்வுண்மையினே வலியுறுத்தும். மொழி வேறு பட்ட தேயங்களில் வாழ்ந்த மக்களைத் தமிழர். மொழிபெயர் தேஎயத்தர் ‘

என வழங்கினர் என்பது தெரிய வருகின்றது.

தமிழ்நாடு பண்டைக்காலத்தில் தென்திசையில் மிகுதியாகப் பரந்திருந்தது. அத் தென் பகுதியில் குமரி