பெருமங்கலம்
மூவேந்தர் குடியின் பழமை
0. 1. தமிழகம் வரலாற்றுத் தொன்மையும் பெருமை யும் கொண்டது; வரலாற்றின் தொடக்க காலத்திலேயே இங்கு வாழ்ந்த தமிழர் நல்ல நாகரிகத்திலும் பண்பாட்டிலும் சிறந்திருந்தனர். காதலும் வீரமும் தமிழர்தம் வாழ்வின் நிலைக்களங்களாகத் துலங்கின. “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுகம் ‘ என எல்லே குறிக்கப் பட்ட தமிழகத்தினை முடியுடை மூவேந்தர் காத்தனர். எனவே வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ ‘ என்றும் தமிழகம் சுட்டப்பட்டது. தொல்காப்பியனர் புறத் திணையியலில்,
“ ...................... ... ...... ......உறுபகை
வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ்ப்
போங்தை வேம்பே ஆரென வருஉம்
மாபெருந் தானையர் மலைந்த பூவும் ‘ என்று பழந்தமிழ் வேந்தர்களான சேர சோழ பாண்டி யர்களின் அடையாளப் பூமாலையாம் பனம்பூ, வேம்பு, ஆத்தி மாலையினைக் குறிப்பிட்டுள்ளார். “வழங்குவது. உள் வீழ்ந்தக்கண்ணும் பழங்குடி பண்பின் தலைப்பிரிதல்
m =
1. தொல்காப்பியம்; பனம்பாரளுர் பாயிரம். 2. தொல்காப்பியம் செய்யுளியல்: 75. 3. தொல்காப்பியம்: புறத்கிணையியல்: 5.