பக்கம்:இலக்கிய மரபு.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

110 இலக்கிய மரபு தனி மனிதரின் உணர்ச்சிகளைப் புலப்படுத்தும் நாவல் களும் சிறுகதைகளும் பெருகிவருகின்றன. பாட்டுக் களும் இன்று பெரிய காவியங்களாக அமைவது குறைந்து, உணர்ச்சிகளை மட்டும் பாடும் தனித் தனிப் பாட்டுக்கள் பெருகிவருகின்றன. இது இலக்கிய வளர்ச்சியில் காணப் படும் விந்தையான போக்காகும். உலகம் ஒரு பெருஞ் சமு தாயமாக அமையும் புறவாழ்க்கை ஒருபுறம் ; அவரவர் தனி யுணர்ச்சியைப் பற்றிய இலக்கியம் வளரும் கலை வாழ்க்கை மற்றொரு புறம்; இரண்டும் முரண்பட அமைந்துள்ளன. பலவகை வாழ்வுகள் இயல்புகளை காவியங்கள், குறிப்பிட்ட மனிதரின் உணர்த்தாமல், சில தெளிவான பண்புகளை உணர்த்தவே அமைந்தன எனலாம். பாட்டு என்னும் இலக்கியம், தனி மாந்தரின் வாழ்வு பற்றி உணர்த்தும் போக்கு இல்லாமல், எடுத்துக்காட்டான மக்கட் பண்புகளை உணர்த்தும் நோக் கம் கொண்டிருந்தது. பாட்டில் சில மனிதர் பாடப்பட் டிருந்தால், அவர்கள் சில பண்புகளுக்கு உருவமாகவே அங்கு அமைந்தனர் எனலாம். ஆயின், நாவல் இலக்கிய மாக வளரத் தொடங்கியதும் இது மாறிவிட்டது. உலகில் உள்ள பண்புகளைப் பற்றிக் கவலைப்படாமல், எத்தனை வகையான மனிதர் உண்டோ அத்தனை பேரின் வாழ்வை யும் அவ் வாழ்வின் நுட்பமான தனி யியல்புகளையும் செய்தி களையும் விளக்குவதற்கு நாவலில் இடம் அமைந்தது.

  • But with the Renaissance this was changed, for there came on this flood a sudden and passionate interest in human life and individual character. The phenomenal displaced the typical, and the result upon the art of story-telling was an instant sharpening of focus, and a con- centration upon factual detail. This was a great step toward the modern novel. -Richard Church, The Growth of the English Novel, p. 8.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/114&oldid=1681860" இலிருந்து மீள்விக்கப்பட்டது