________________
வருணனை குறை தல் நாவல் 171 சென்ற நூற்றாண்டு வரையில் கதைகளில் வாழ்க்கை முறைகள், உடை வகைகள், பழக்க வழக்கங்கள் முதலிய வற்றை விரிவாக வருணிக்கும் வழக்கம் இருந்தது. பக்கம் பக்கமாக இவற்றை வருணித்தல், கதையாசிரியர்களின் திறமையைக் காட்டுவதாகவும் இருந்தது. ஆயின், இப் போது உலகம் ஒரு குடும்பம் போல் நெருங்கிவரும் போக்கு மிகுந்துவருகிறது. போக்குவரத்தால், பயணங்கள் பெரு குதல், கல்வியால் மனப்பான்மை ஒன்றுபடல், சமுதாய உறவால் பழக்க வழக்கங்கள் ஒரே வகையாதல், நாகரிகக் கலப்பால் உடை முதலியன ஒத்துவருதல் ஆகியவற்றால், வாழ்க்கையில் உள்ள வேறுபாடுகள் குறைந்துவருகின் றன. ஆகவே, உடை முதலியவற்றையும் பழக்க வழக்கங் களையும் எல்லாரும் அறிந்திருப்பதால், அவற்றைப் பற் றிய வருணனை வீணானதாக உள்ளது. ஆதலின், இக் காலத்துக் கதைகளில் அவற்றை வருணித்தல் குறைந்து விட்டது எனலாம். அதற்கு மாறாக, இக் காலத்தில் மாந்தரின் உள்ளத்து உணர்ச்சிகளையும் போராட்டங்களையும் விரிவாக விளக்கும் வழக்கம் வளர்ந்துவருகிறது.
- But industrialism is also an enemy, because it standardises our- environment, and thus compresses our experience into ordained shapes, and makes our reactions uniform. Could Fielding, or Dickens, today find effortlessly that amazing picturesque contrast of costume, habit, ideas, and finally of character, which adorns their tales of contemporary life. Already people are more alike at least in appearance and social habits. That is one reason why novelists have had to plunge beneath: the surface, seeking the internal drama which individuals are becoming: too civilised to demonstrate.
--Richard Church, The Growth of the English Novel, pp. 126-127.