பக்கம்:இலக்கிய மரபு.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாவல் 115 ஆண்களும் இருந்து பேசும் பேச்சுக்களையும் அவர் அறிந் திருப்பார். அத்தகைய பேச்சுக்களையே அவர் தம் நாவலில் அமைத்துள்ளார். ஆண்கள் மட்டும் கூடி அளவளாவிப் பேசும் பேச்சுக்களை ஒரு பெண் நேரே அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆணாக மாறுவேடம் தாங்கி அவர்களிடையே பழகி யிருந்தால் தவிர, உள்ளவாறு அந்தப் பேச்சு முறையை அறிந்திருத்தல் அரிது. ஆகவே ஆஸ்டின் என்னும் அந்த அம்மையார் தம் நாவல்களில் அத்தகைய பேச்சுக்களை, இரண்டு இன்றியமையாத இடங்கள் தவிர வேறு எங்கும் அமைக்கவில்லையாம். தவறான தமக்குத் தெரியாததைத் தெரிந்ததாக உணர்த்தி எழுதுதலும் ஆகாது; தாம் உணராததை எவ்வாறோ சொல்லமைப்பால் உணர்த்துதலும் ஆகாது; அக் காலத்தில் வழங்கும் மரபுகளைப் போற்ற வேண்டும் என்பதற்காகத் தாம் விரும்பாத ஒன்றை வலிய அமைத்து எழுதுதலும் ஆகாது; அவ்வாறே தம் காலத்து மக்களை மகிழ்விக்கும் பொருட்டு, தாம் வேண்டாத ஒன்றைச் சேர்த்து எழுதுதலும் ஆகாது. இவை எல்லாம், கலைத் திறனுக்கு இழுக்கான குற்றங்களாகும். இந்தக் குற்றங் களுக்கு இடந் தருவதால் ஒரு நாவல் மிக விரைவில் பரவு தலும் கூடும்; ஆயினும் அது நிலையான வாழ்வு-அல்லது, நெடிது நிற்கும் வாழ்வு பெறுதல் அரிது. கூட்டல் குறைத்தல் நாவலில் நிகழ்ச்சிகளையும் வருணனைகளையும் கூட்டவும் குறைக்கவும் ஆசிரியர்க்கு உரிமை உண்டு. நாடகத்தில், இன்றியமையாத உணர்ச்சிக்கும் கற்பனைக்கும் மிகத் தேவையான சிலவற்றை மட்டும் எடுத்துரைத்து, மற்றவற்றைச் சொல்லாமலே விட வேண்டும்; ஏன் எனில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/119&oldid=1681839" இலிருந்து மீள்விக்கப்பட்டது