பக்கம்:இலக்கிய மரபு.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மரபு இழுமென் மொழியான் விழுமியது நுவலினும் பரந்த மொழியான் அடிநிமிர்ந்து ஒழுகினும் தோல்என மொழிப தொன்மொழிப் புலவர்.* 197 முன்னைய வகைக்குக் கலித்தொகைப் பாட்டுக்களும், பின் னைய வகைக்குப் பத்துப்பாட்டும் எடுத்துக்காட்டாகலாம். 5. விருந்து : புதிய பொருள் பற்றி அமைவது. விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே. சிலப்பதிகாரம், தோன்றிய காலத்தில் விருந்தாகக் கொள் ளப்பட் டிருக்கலாம். இக்காலத்து நாவல்கள் எடுத்துக் காட்டாகலாம். 6. இயைபு : ஞ முதல் ன வரையில் உள்ள மெய் யெழுத்துக்களை ஈற்றெழுத்தாகப் பெற்று அமைவது. ஞகார முதலா னகார ஈற்றுப் புள்ளி யிறுதி இயைபெனப் படுமே. மணிமேகலை னகர ஈற்றில் முடிவதால், எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். 7. புலன் : ஆராய்ந்த சொற்களால் நன்றாக எடுத்துக் கூறப்படுவது; ஆராயாமலே எளிதில் குறித்த பொருள் தோன்றுமாறு அமைவது. தெரிந்த மொழியால் செவ்விதின் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின் புலன்என மொழிப புலன்உணர்ந் தோரே.S இக்காலத்துப் பாட்டுக்கள் போல் எளிதில் கருத்து விளங்க. அமைவன எடுத்துக்காட்டாகலாம்.

  • செய்யுளியல், 236.

t 237.

238. 37 § 239. 59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/195&oldid=1681916" இலிருந்து மீள்விக்கப்பட்டது