________________
மரபு 195 சென்ற நூற்றாண்டின் இராமலிங்க வள்ளலாரின் பாட்டுக் களில் அந்த வளர்ச்சி சிறந்து விளங்கக் காண்கிறோம். இந்த நூற்றாண்டின் பாரதியார் பாடிய 'கண்ணன் பாட்டு' என்பதிலும் அதே அமைப்பைக் காண்கிறோம். முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத் தன்னை மறந்தாள்தன் நாமம் கெட்டாள் தலைப்பட் டாள்நங்கை தலைவன் தாளே. ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னைசொல் நீர்படுத்து ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள் பேரமர் காதல் கடல்புரைய விளைவித்த காரமர் மேனிநம் கண்ணன் தோழீ கடியனே.† விண்படைத்த பொழில்தில்லை அம்பலத்தான் எவர்க்கும் மேலானான் அன்பருளம் மேவுநட ராசன் பண்படைத்த எனை அறியா இளம்பருவந் தனிலே பரிந்துவந்து மாலையிட்டான் பார்த்தறியான் மீட்டும் பெண்படைத்த பெண்களெலாம் அவமதித்தே வலது பேசுகின்றார் கூசுகின்றேன் பிச்சிஎனல் ஆனேன் கண்படைத்தும் குழியில்விழக் கணக்கும்உண்டோ அவன்றன் கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ.
- திருநாவுக்கரசர், தேவாரம் ஆறாம் திருமுறை, திருவாரூர். நம்மாழ்வார், திருவாய்மொழி, 5.8.4.
திருஅருட்பா,ஆரும் திருமுறை, வேட்கைக்கொத்து, 1.