பக்கம்:இலக்கிய மரபு.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

204 இலக்கிய மரபு படித்தோ பழைய விதிகளை அறிந்தோ இயற்றப்படும் நூல் சிறந்த இலக்கியமாகாது. வா ழ்விலிருந்து நேரே முகிழ்க்கும் நூல்கள் இயற்கையான விதிகளைக் கொண்டு அமையும். பிற்காலத்தே வரும் ஆராய்ச்சியாளரும் இலக் கணப் புலவரும் அவ்விதிகள் இன்ன இன்ன என்று எடுத்துக் கூறுவர். ஆயின் அவ்வாறு அமைத்த விதிகள் பிறகு படைக்கப்படும் நூல்களைக் கட்டுப்படுத்தும் தளைகளாக அமைதல் கூடாது.* அவ்வாறு கட்டுப்படுத்து வனவாயின், அவற்றைப் பின்பற்றி இயற்றப்படும் நூல்கள் கலைச் செல்வங்களாக வாழ முடியாமற் போகும். பாட்டு விதிகளுக்கு இயைந்து அமைதல் வேண்டும்; ஆயினும் அவற்றைக் கடந்தும் உயர்தல் வேண்டும்; விதிகள் அதற்குச் சிறகுகள் போன்றவை என்றும், அந்தச் த சிறகுகள் அதனைப் பறக்கவிடாமல் இழுத்தல் கூடாது என்றும், உரிமை நோக்கி உயர விட வேண்டும் என்றும் தாகூர் கூறியுள்ளார்.

  • Literature written to order and in accordance with a definite code is almost certain to be characterised by a certain quality of premcdi- tation and strain.

-W. H. Hudson, An Introduction to the Study of Literature, p. 298. †The beauty of a poem is bound by strict laws, yet it transcends them. The laws are its wings, they do not keep it weighed down, they carry it to freedom. Its form is in law, but its spirit is in beauty. - R. Tagore, Sadhana, pp. 98-99.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/208&oldid=1682080" இலிருந்து மீள்விக்கப்பட்டது