________________
24 இலக்கிய மரபு மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி ஆணிப்பொன் னாற்செய்த வண்ணச் சிறுத்தொட்டில் பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான் மாணிக் குறளனே தாலேலோ வையம் அளந்தானே தாலேலோ முதலான பத்துப் பாட்டுக்கள் தாலாட்டுப் பற்றியன. இவ் வாறே, நிலாவை அழைத்தல் (பிற்காலத்தில் அம்புலிப் பருவம் எனப்படுவது), செங்கீரை ஆடுதல், சப்பாணி கொட்டுதல், தளர்நடை நடத்தல், ஓடிவந்து தன்னை அணைத்துக் கொள்ளுமாறு தாய் குழந்தையை அழைத் தல், குழந்தை தாயின் முதுகைக் கட்டிக்கொள்ளல் (புறம் புல்குதல்), அப்பூச்சி காட்டுதல் (ஒளிந்திருந்து பூச்சி காட்டு தல்) முலை யுண்ணுமாறு அழைத்தல், காது குத்தல், எண் ணெய் நீராட அழைத்தல், தலை வாரும்போது பராக்குக் காட்டக் காக்கையை அழைத்தல், மாடு மேய்க்கக் கோல் கொண்டுவரச் சொல்லல், பூச்சூட்டுவேன் வருக என்று அழைத்தல், திருட்டி தோடம் வராமல் அந்தி வேளையில் காப்புச் செய்வதற்கு அழைத்தல், குழந்தையின் குறும்பு. களால் சுற்றுப்புறத்தார் தாயிடம் முறையிடலும் தாய் நோதலும் முதலானவற்றைப் பற்றிப் பத்துப் பத்துப் பாடல்கள் பாடியுள்ளார். அவற்றைக் கண்ட பிற்காலப் புலவர்கள், பல பருவங்கள் கொள்ளாமல், பத்துப்பருவம் நூறு பாட்டு என வரையறை அமைத்துக்கொண்டு பிள்ளைத்தமிழ் நூல்கள் பாடினர். குழந்தையைத் திருமால் முதலிய தெய்வம் காக்க என வேண்டிக் கொள்ளும் காப்புப் பருவம், குழந்தை சில ஒலி களை ஒலித்துத் தலை நிமிர்த்துத் தவழ்ந்தாடும் செங்கீரைப் பருவம், தாலாட்டுப் பருவம், கை கொட்டி ஆடும் சம் பாணிப் பருவம், முத்தம் தருக என அழைக்கப்படும்