பக்கம்:இலக்கிய மரபு.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாகுபாடு 31 5.உலகில் இல்லாத புதுமைகளைக் கற்பனையில் கண்ட அனுபவம் பற்றிய இலக்கியம் : கலிங்கத்துப் பரணியில் பேய்களைப் பற்றிய பகுதியும், பாரதியாரின் குயில்பாட்டு முதலியனவும் இவ்வகையின. புலவர் மனநிலை ஒட்டிய பாகுபாடு புலவர் உணர்ச்சி வயமாகித் தாம் கலந்து பாடியவை - ஒன்றிய பாட்டு (personal or subjective poetry) என்றும்;- பிறருடைய அனுபவத்தைப் பற்றின்றி உணர்த்தும் வகையில் பாடியவை ஒன்றாப் பாட்டு (impersonal or objective poetry) என்றும் ஆங்கிலத்தில் பாகுபாடு செய்வர். தன்னுணர்ச்சிப் பாட்டுக்களும் (lyrics) பக்திப் பாட்டுக்களும் (hymns) முன்னைய வகையைச் சார்ந்தவை. எடுத்துரைப் பாட்டுக்களும் (narrative poetry), காவியங்களும் (epics) பின்னைய வகையைச் சார்ந்தவை. நாடகத்தில், புலவர் பற்றின்றி நின்றும், நாடக மாந்தரின் உணர்ச்சிகளை ஒன்றிய வாய்பாட்டால் கூறுதலால், இருவகையும் (sub- jective, objective) கலந்த கலப்பைக் காணலாம். நாடகம் பொருளால் ஒன்றா இலக்கியமாகவும், கூறும் முறையால் ஒன்றிய இலக்கியமாகவும் உள்ளது. புலவர், தாம் கலந்து ஒன்றிப் பாடுதல், தாம் கலவாமல் பற்றின்றிப் பாடுதல் என்ற இரண்டும் தனித் தனியே இல்லை. இரண்டும் ஓரளவு கலந்தே அமைகின்றன. புல வரின் உணர்ச்சியும் மனநிலையும் கலவாமல் எந்த இலக் கியமும் அமைவதில்லை என்பதை முன் கண்டோம்.. ஆயினும், புலவரின் சொந்த உணர்ச்சி, தன்னுணர்ச்சிப் பாட்டுக்களாகிய {lyrics) பக்திப் பாட்டுக்கள், கையறு நிலைப் பாட்டுக்கள் முதலியவற்றில் மிகுந்திருக்கும். ஆகையால், அவை ஒன்றிய பாட்டுக்கள் (subjective poetry) என மிகுதி யான தன்மை பற்றிக் குறிக்கப்படும். காவியம் நாடகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/35&oldid=1681817" இலிருந்து மீள்விக்கப்பட்டது