பக்கம்:இலக்கிய மரபு.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாடகம் (romanticism) மிகுந்த நாடகம் உரை நடையால் அமை யாமல் செய்யுளால் அமைதல் நல்லது எனச் சார்ல்டன் என்ற ஆசிரியர் கருதுகிறார். உரைநடை வாழ்க்கையின் கூறு ஆகையால், உண்மை (realism) மிகுந்த நாடகத் திற்கு அது உரியது என்பது அவர் கருத்து. அருமை ஒரு மூலையில் இருந்து நாடகம் இயற்றும் புலவர், ஒரு கதையின் நிகழ்ச்சிகளை மட்டும் மனத்தில் கற்பனை செய்துகொண்டு எழுதுதல் போதாது ; நடிகர் நடிக்கும் மேடையில் வரும் காட்சிகளையும், நாடகத்தைக் காணும் மக்களின் மன நிலைகளையும் கற்பனை செய்து எழுதுதல் வேண்டும். ஆகவே இருவகைக் கற்பனையும் கதைக் கற்பனையும் நாடக அரங்கின் கற்பனையும் அவருக்கு ஒருங்கே தேவையாகின்றன. மக்கள் பலரும் ஒரே நேரத்தில் கூடிக்கண்டு இன்புறத் தக்க வகையில், பலர்க்கும் கவர்ச்சி தரக் கூடிய கதைப் பகுதிகளையும் காட்சிகளையும் தேர்ந்து அமைக்க வேண்டும்; யலர்க்கும் கலைவிருந்து அளித்தல் வேண்டும் என்ற கார ணத்தாலேயே, நடிப்பு மிகக் கடுமையான கட்டுப்பாடு களுக்கு உள்ளாக வேண்டியுள்ளது. இத்தனையும் மனத் தில் கொண்டு இயற்றப்படுவதாதலின் நாடகம் அருமைப் பாடு உடைய கலையாகும். கதை எழுதுபவர் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் மெல்ல விளக்கிச் செல்லலாம். ஆனால் நாடகம் குறித்த சிறிது நேரத்தில் கண்டும் கேட்டும் நுகரத் தக்கது ஆகையால், செயல்களாலும் பேச்சுக்களாலும் உணர்த்துவனவற்றை மக்கள் விரைவாகவும் தெளிவாகவும் உணரத் தக்கவாறு அமைக்க வேண்டும். அதனால் திறமையுள்ள ஒருவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/77&oldid=1681979" இலிருந்து மீள்விக்கப்பட்டது