பக்கம்:இலக்கிய மரபு.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

80 இலக்கிய மரபு போற்றப்பட்டுவருகின்றன. தமிழ் நாடகங்களிலும் அவை போற்றப்பட்டுவந்திருக்கும் எனலாம். அவையாவன : நாடகம் மங்கலமாக முடியவேண்டும்; சாவும் கொடுந் துன்ப நிகழ்ச்சிகளும் காட்டப்படல் ஆகாது ; கடித்தல், சொரிதல், முத்தமிடல், தின்னல், உறங்கல் இவற்றை நாடக மேடை யில் நடித்துக் காட்டல் ஆகாது. இத்தகைய விதிகள், தொன்றுதொட்டே தமிழ்நாட்டில் செழித்துவரும் நாடகக் கலைக்கு அமைந்திருந்தன எனலாம். காலத்திற்கு ஏற்ப மாறுதல் நாடகக் கலை காலந்தோறும் மாறுதலுற்று வளர்ந்து வருகிறது. அதற்கு ஏற்ப, நாடக இலக்கியமும் மாறுத லுற்றுவருகிறது. நாடக அரங்கும், அரங்கில் அமைக்கப் படும் திரைகள் முதலியவைகளும், விளக்குகள் முதலியவை களும் முன்னேற்றம் பெற்று மாறிவரக் காண்கிறோம். ஒலி பரப்பிகள் முதலியவை புதியனவாக வந்து சேர்ந்து சில மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளன. இவற்றால், நாடக இலக் கியத்திலும் உரையாடல் முதலியவற்றில் மாறுதல் ஏற்பட் டுள்ளது. நாடகக் கலைஞரின் நோக்கங்களிலும் முயற்சி களிலும் ஏற்பட்டுவரும் மாறுதல்களும் நாடக இலக்கி யத்தில் சில மாறுதல்களை விளைத்துவருகின்றன. எடுத்துக்காட்டாக, முற்காலத்தில் ஒரு பாட்டை நடிப் பவர் பாட, அவரை அடுத்து அதைத் தொடர்ந்து பலர் சேர்ந்து பாடிவந்தனர். அதைப் பின்பாட்டு என்று கூறு வர். பின்பாட்டுப் பாடும் வழக்கம் இன்று அடியோடு மறைந் தது. தெருக்கூத்து என்பதில் மட்டும் கிராமங்களின் மூலை முடுக்கில் அது இருந்துவருகிறது. இனி அங்கும் இடம் இல்லாமல் மறைந்தழியும் எனலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/84&oldid=1681991" இலிருந்து மீள்விக்கப்பட்டது