பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

93


என்ற நற்செய்தியோடு என் உரையை முடித்துக்கொள்கிறேன். வணக்கம்.

கலை எதற்கு ?

4-5-53ல் இலங்கை வானெலியில் 'கலை எதற்கு' என்ற பொருள் பற்றி பேசி பதிவு செய்த சொற்பொழிவு.

கலை, கலைக்காகவா, கலை, மனித வர்க்கத்தின் முன்னேற்றத்திற்கா,கலை, பல கருத்துக்களை அணி கலன்களாகக் கொண்டு கண்டுகளிப்போர் உள்ளத்தை அள்ளும் சாதனமா, அல்லது சமுதாய மாறுதலைக் காட்டும் காலக்கண்ணுடியா, என்ற பகுதிகளை ஆராய்வோம்.

எப்படி நீரால் நீருக்கே நன்மையில்லையோ, எப்படி காற்றால் காற்றுக்கே நன்மையில்லையோ. எப்படி நிலத்தால் நிலத்துக்கே நன்மையில்லையோ, அதைப்போல் கலையால் கலைக்கே நன்மையில்லை.

நீரைக்கொண்டு நிலத்தைப் பயிர் செய்வதும், நீரால் குளித்து உடற் தூய்மையடைவதும், நீரைக் குடித்து தாகவிடாயைத் தீர்த்துக் கொள்வதும் நன்மையைப் பயப்பது என்பது மாத்திரமன்னியில் இன்றியமையாதது என்ற ஆராய்ச்சியில் இறங்கும்போது நீரும் நிலமும் தொடர்பு கொண்டாலன்றி எப்படி விளைபொருள்களைக் காணமுடியாதோ, நீரும் உடலும் தொடர்பு கொண்டாலன்றி எப்படி உடலிழுக்கைப் போக்கிக்கொள்ள் முடியாதோ, நீரைக் குடித்தாலன்றி