பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

இலங்கை எதிரொலி


எப்படித் தாகத்தைத் தீர்த்துக்கொள்ள முடியாதோ, அதேபோல் கலையை மக்கள் ரசித்தாலன்றி உள்ள மகிழ்ச்சியைக் காணமுடியாது.

பொதுவாகவே உலகத்தின் இயற்கை நியதி ஒன்றை ஒன்று தொட்டாலன்றி ஒருவித பயனோ, மாறுதலோ, இன்பமோ, இயற்கை சக்திகளை செயற்கையிலிடைக்கும் தன்மையோ ஏற்படுவதில்லை என்பதை யாரும் மறுப்பற்கில்லை.

எங்கேயோ காட்டில் நின்ற மரம் யாழின் உடலாகவும், நிலத்தின் அடிவாரத்தில் கிடைத்த இரும்பால் செய்யப்பட்ட கம்பிகள் யாழின் தந்திகளாகவும் அமைத்து அவைகளை நம்முடைய விரல்களால் தடவினாலன்றி நாதம் எழும்புவதில்லை. அந்த இன்பமான இசையை நாம் கேட்பதற்கு, மரம், இரும்பு, விரல்கள் ஆகிய மூன்றும் சேர்ந்து இசையை எழுப்பி நம்மை இன்புறச் செய்கிறது. அதேபோல் கவிஞனுடைய கற்பனைகளை அவனே எழுதி அவனே படித்து அவனே அழித்துவிட்டுப் போய்விட்டால் அதனால் மக்களுக்கு யாதொரு பயனும் ஏற்படுவதில்லை. அந்தக் கவிஞன் எழுதிய கவிதைகளை மக்கள் மன்றத்தின் முன்வைத்தாலன்றி. அது பெருமை பொருந்திய கவி யென்றோ சிறுமை நிரம்பிய கவியென்றோ தீர்ப்பைப் பெறுவதில்லை. ஆகவே ஒன்றை யொன்று தொட்டாலன்றி பயன்காண முடியாதென்ற முடிவுக்கு வருகின்றோம்.

“மக்கள், மெய்த்தீண்ட லுடற்கின்பம் மற்றவர் சொற்கேட்டால் இன்பம் செவிக்கு”