பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பி.சிற்றரசு

99



குழந்தைகளே நாம் ஏன் வளர்க்க வேண்டும், செடி கொடிகளை நாம் ஏன் வளர்க்கவேண்டும், சில சாதுவான நன்றியுள்ள பிராணிகளை நாம் ஏன் வளர்க்க வேண்டும். பறவைகளை ஏன் நாம் வளர்க்கவேண்டும், பயிரினங்களை ஏன் நாம் வளர்க்கவேண்டும், கல்வியை நாம் ஏன் வளர்க்கவேண்டும், அரசியலே ஏன் நாம் வளர்க்கவேண்டும், அன்பை ஏன் நாம் வளர்க்க வேண்டும், அறிவை ஏன் நாம் வளர்க்க வேண்டும் என்ற கேள்விகளுக்கு ஒப்பானதாகும்.

நமது பிற்கால பாதுகாப்புக்காக நாம் ஈன்ற மக்களை வளர்ப்பதைப் போல, நமது அன்றாட தேவைகளுக்காக செடி கொடிகளையும் பயிரினங்களையும் வளர்ப்பதைப்போல, வீட்டுப் பாதுகாப்புக்காகவும் உணவுப் பொருள்களுக்காகவும் சில பிராணிகளை வளர்ப்பதைப்போல, குழந்தைகள் மகிழ்ச்சியுற சில பறவைகளை வளர்ப்பதைப்போல, வாழ்க்கைக்காகவும் அறிவு வளர்ச்சிக்காகவும் நாம் கல்வியை வளர்ப்பதைப்போல, நாடு நலமடைய நாம் அரசியலே வளர்ப்பதைப் போல, சமுதாயம் ஒற்றுமை காண்பதற்காக நாம் அன்பை வளர்ப்பதைப்போல, உள்ளத் தூய்மையும், வாழ்வில் உயர்ந்த லட்சியங்களையும் கொள்ள நாம் அறிவை வளர்ப்பதைப்போல, கலையை கவலையோடு வளர்க்க வேண்டியவர்களாகிறோம். கலை ஒன்றுதான் குன்றின் மேலிட்ட விளக்கென ஒளிவிடத் தகுந்தது. அந்த ஒளியிலேதான் சமுதாயம் இழந்தவைகளைக் கண்டுபிடிக்கமுடியும். - புகழேணியில் ஏறி அந்த மாபெரும் மனித சமுதாய மெனும் கீர்த்தி குன்றத்தின் சிகரத்தில் வீற்றிருக்