பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

இலங்கை எதிரொலி



கும் கலையை கண்ணில்லாத குருடனும், காதால் கேட்கமுடியும், கையில்லாத முடவனும் கண்ணாலும் மனதாலும் தொடமுடியும். காலில்லாத நொண்டியும் கருத்தால் அணுகமுடியும். ஆனால் நெட்டிரும்புபோல் நெகிழாத மனமுடையவனால் நிச்சயமாக அதை அணுக முடியாது. அது, மக்கள் அடைந்த நாகரீகப்படி. அறிவு வளர்ச்சியின் முத்திரை. கண்டிப்பாக சமூகம், வளர்ந்தே தீரும் என்று வினாடிக்கு வினாடி விட்டுக் கொண்டிருக்கும் அறைகூவல். கலை மக்களுக்கானால் கவலை தீர மார்க்கமுண்டு. கலை கலைக்காக என்பது யாரோ சில சுயநலமிகள் கட்டிவிட்ட கதை. ஆகவே கலை நமக்காகத்தான். வணக்கம்.


திருச்சி இப்பொறி அச்சகத்தில் 49-வது பக்கத்திலிருந்து அச்சிடப்பட்டது.