பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

3


பதிலையும் படம் பிடித்து பத்திரிகையில் போட்டு மீண்டும் டெல்லி சட்டசபையில் நேரு அவர்களுக்கு இவைகளைக் காட்டியபிறகு, மன்னிக்கவேண்டும், எனக்குத் தெரியாது' என்று அவர் சொல்லியதையும் இறுதியாக வர அனுமதி கிடைத்ததையும் நீங்கள் அறிவீர்கள். இதை ஏன் நான் இவ்வளவு விளக்கமாகச் சொல்லுகிறேன் என்றால் நான் இரண்டு மணி நேரத்தில் சுலபமாக வந்துவிட்டேன் என்று கருதிக்கொண்டிருந்த நிருபர்களுக்கு எங்கள் நாட்டு ஜனநாயகம் எவ்வளவு ஆமை வேகத்தில் நடக்கிறது என்பதை நீங்களறியவேண்டும் என்பதற்காகவே இதைச் சொல்லவேண்டியவனாய்விட்டேன். மற்றபடி இதை எங்கள் சர்க்காரை இந்த 500 மைல்களுக்கப்பால் குறைகூற வந்திருக்கிறோம் என்று தவறாக நினைத்துக் கொள்ளக்கூடாது. ஒரு சர்க்காரை குறை கூறுவது எங்கள் தி. மு. கழகத்தின் வேலையல்ல. கொடிய செயலை எதிர்த்து சிறை செல்ல வேண்டிய வேலை எங்களுடையது. சிறை செல்வதின் மூலம் வரும் நன்மைகளே மக்களுக்குப் பொதுவாக்கி, கிடைக்கும் துன்பத்தை மாத்திரம் ஒவ்வொரு திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டனே தனியாக அனுபவிக்கக் கடமைப்பட்டிருக்கின்றான் என்பதும் அத்தகு வீரமும், ஆற்றலும் உடைய மலரையே திராவிட முன்னேற்றக் கழகம் இதுவரை கண்டிருக்கிறது. கோழைகளுக்கும், குள்ளமதிப்பினருக்கும், சுயநலமிகளுக்கும் சோம்பேறி விளம்பரப் பிரியர்களுக்கும் கொஞ்சங்கூட இடமில்லாமலாக்கி பணத்தால் கட்சியில் இடந்தேடு பவர், படாடூபத்தால் கட்சியில் முன்னணியில் நின்று பின்னால் நிற்கும் உண்மையான தொண்டர்களின் நிழல் கூட பொதுமக்களுக்குத் தெரிய ஒட்டாமல் தடுத்துக் கொண்டிருந்தவர்களே வழியனுப்பி தூயத்தொண்டுள்ளம் கொண்டுழைக்கும் நல்ல வாலிபர்களைக் கொண்டிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.