பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

இலங்கை எதிரொலி



இலங்கையிலாகிலும் வயதானவர்கள் யாராவது தி.மு.க.வில் இருக்கின்றார்களா என்று எனக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்ட அனைவரையுமே பார்க்கும் போது எல்லாருமே இளைஞர்கள், மனம் பூரித்தேன். வயோதிகத்துக்கு நான் விரோதியல்ல—நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் வயோதிகம் நம்மைவிடப் போவதில்லை. ஆனால் வாலிப பருவத்தில் வயோதிக உள்ளம் படைத்தவர்களே எனக்குப் பிடிக்காது. வாழ்க்கை பூவிரித்த மஞ்சமல்ல், சேவை பம்பரம், என்கிறான் ஒரு அறிஞன். அதேபோல் நாம் கடந்து செல்லவேண்டிய எவ்வளவோ தொலைவான பாதையை தைரியமாகக் கடந்து செல்ல வாலிபர்கள் மிகமிகத் தேவை என்று கணிக்கும் போது, இலங்கையில் கண்ட இளைஞர்கள் அனைவருமே நமது பணிக்கு ஆக்கங்கொடுக்கக்கூடிய ஆற்றல்மிக்கவர்களாயிருந்ததைக்கண்டு மேலும் எங்கள் பூரிப்பு எண் மடங்காயிற்று. திராவிடத்திலே இருந்து இங்கு யாரும் தி.மு.காவின் சார்பில் வராமலே இவ்வளவு திறமையோடு இயக்கம் வளர்ந்திருப்பதற்குக் காரணம், இங்குள்ளோர் தீவிர முயற்சியும், அங்கிருந்து எழுத்துக் குவியல்களை எண்ண உருவில் ஏந்திவந்த ஏடுகளும் எண்ணற்ற கருத்தமைந்த நூல்களும், உங்கள் அனைவர் உள்ளத்திலும் குடிகொண்டிருக்கின்ற அண்ணாவின் அறிய சேவைகளுமே என்பதை இந்த அடைமழையிலும் ஆயிரக்கணக்காக கூடியிருக்கும் உங்கள் ஆர்வம் காட்டுகிறது. நாங்கள் நனைந்துவிடக்கூடாது என்று பல தோழர்கள் குடைகளை விரித்து பிடித்தார்கள். இவர்கள் அன்புக்கு என் நன்றி. ஆனால் கூட்டத்தில் இருக்கின்ற உங்களைப் பார்க்கும்போது திருநெல்வேலி, மதுரை, இராமநாதபுரம் வாசிகளையே இங்கு மீண்டும் பார்ப்பதைப் போலிருக்கிறது. ஆனால் திரவிடத்தில் நெடுநாட்கள் பார்க்காக ஒன்றை இங்கே பார்க்கிறோம். அதுதான் மழை. அதையும் நாங்-