பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பி.சிற்றரசு

5


கள் பார்க்காமல் அன்பு பெருக்கால் உங்கள் கொடைகளின் மூலம் மறைக்காதீர்கள் என்று உங்களை தயவாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன். மழையை நீங்கள் பார்த்துப் பார்த்து பழகிவிட்டவர்கள். நாங்கள் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பார்த்து பரவசமடைபவர்கள். ராஜாஜி வந்தபிறகு மழை பெய்யவில்லையா என்று ஒரு தோழர் கேட்கிறார்! உண்மைதான். அவர் வந்த பிறகு மழை மாத்திரம் பெய்யவில்லை, பெரும்புயலும் அடித்து மரங்கள், வீடுகள் ஒன்றுமே இல்லாமல் கதிர்காமம் போய் வந்தவன் தலைபோலிருக்கிறது. மழை பெய்த பெருமையை தோழர், ஆச்சாரியாருக்கு அளிக்கவேண்டிய கவலையில் ஆழ்ந்திவிட்டார். அதை வேண்டாமென்று சொல்லும் அவ்வளவு சுயநலக்காரர்கள் அல்ல நாங்கள், கடல் போன்ற ஒரு பெரிய திராவிட சமுதாயமே விரும்பத் தகாத பல பெருமைகளை ஆச்சாரியாரின் வர்க்கத்துக்குக் கண்மூடித்தனமாக அளித்து அந்த மிளாத உளைச்சேற்றி லிருந்து தப்பித்துக்கொள்ள மார்க்கமில்லாமல் திண்டாடி தெருவில் நிற்கும் பல கோடி திராவிட மக்களை மீட்பதற்காகவே தி. மு. க. சமுதாயத் துறையில் பாடுபட்டுக் கொண்டுவரும்போது ஒரு மழையின் பெருமையை ஆச்சா ரியாருக்களிப்பதிலே எங்களுக்கு எவ்வித வேற்றுமையுமில்லை. இது எந்தவித பொருளாதார அடிப்படையிலும் ஏற்படாத புகழ் மாற்ற வியாபாரம் ஆகையால் கேள்விப் பட்ட தோழர் ஆச்சாரியாருக்கு புகழைத் தேடிக் கொடுப் பதில் எந்தவிதமான கமிஷன்யும் எதிர்பார்க்கக் கூடாது என்று மட்டிலும் தோழருக்குச் சொல்லிக் கொள்கின்றேன்.

அடுத்தபடியாக நாங்கள் இங்கே வருவதற்கு முன்னே, ”இந்தியாவிலிருந்து இரண்டு நாத்தீகர்கள் வருகிறார்கள், வருகிறார்கள் எச்சரிக்கை” என்று அறிவிக்கப்பட்