பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

இலங்கை எதிரொலி



என்றுயாரும் கைகட்டிக்கொண்டுவாளாயிருப்பதில்லை , இருக்கவுமில்லை. ஆண்டவன், நம்மை வட்டி வாங்கச் சொல்லவில்லை. பொருள்களுக்கு லாபம் சம்பாதிக்கச் சொல்லவில்லை. வழக்குத் தொடர்ச்சொல்லவில்ல். வம்பு பேசித் திரியச்சொல்லவில்லை. இது அவ்வளவையுமே அன்றாடம் செய்துகொண்டிருக்கிறோம். ஏன் நம்முடைய வளர்ச்சிக்கு இவைகள் நீக்கமுடியாத தேவைகளாய்விட்டன. இனி அவைகளை நீக்கி மகா புனிதத்தன்மையோடு மனிதன்வாழ்வதென்பது ஒருக்காலும் முடியாத காரியம். ஆண்டவன் கட்டளைக்கப்பால் போய் நாம் கண்ட அந்த ருசிகள் எளிதிலும், எப்போதும் விடமுடியாதவை. ஆகவே இந்த மாதிரியான சிலந்திக்கூண்டில் அகப்பட்டுக்கொண்டிருக்கிற நாம் தீர்க்கப்படாததும், தீர்க்க முடியாததும், தீர்க்கத் தேவையில்லாததுமான அணுவசியமான பிரச்சினயில் குதித்து அன்பைப் போக்கிக் கொள்வதால் யாருக்கும் பயனில்லைஎன்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நோக்கமாகும். அரசியல் துறையிலே திராவிடம் தனியாக பிரியவேண்டுமென்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. திராவிடநாட்டுப் பிரிவினைக்கு இலங்கைவாழ் திராவிடர்கள் எந்தவகையில் உதவி செய்யலாம் என்பதை மட்டிலும் அறிந்துவரும்படி அண்ணா எங்களே அனுப்பி வைக்கவில்லை. எந்த நேரத்திலும் கப்பல் ஏறவேண்டிய நிலையில் இங்கே சட்டத்தின் முன்னே குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டிருக்கிற எழு லட்சம் திராவிடத் தோழர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் எந்த வகையில் உதவி செய்யலாம் என்பதையும் அறிந்துகொண்டு வரும்படி இ. மு. கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணா அவர்கள் சட்ட ரீதியாக எங்களை அனுப்பிவைத்திருக்கின்றார்கள். ஆகவே இங்கே நாங்கள் இருபது நாட்கள் தங்கி மலைநாடுகளைச் சுற்றி