பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பி.சிற்றரசு

11


டிருந்தபோது கொஞ்சதூரம் வெய்யிலாக இருந்தது வேர்த்துவிட்டோம். மீண்டும் மழை பெய்தது நனைந்தோம்; வர வர ஜனத்திரள் அதிகமாயிற்று கூட்டத்தில் நசுங்கினீர். ”திராவிட நாடு திராவிடருக்கே” என்ற பேரொலி, வங்கத்திலிருந்து எண்ணூறு பேர்களோடு இங்கு வந்த விஜயன் எழுப்பிய சங்கொலியையும் தோற் கடித்துவிட்டது. அதற்குப் பிறகு தென்னகத்திலிருந்து வந்து படையெடுத்த எலாலன், அவனுக்குப் பிறகு வந்த கரிகாற் சோழன், ஆகியோர் எழுப்பிய இரண பேரிகையின் முழக்கத்தையும் மங்கவைத்துவிட்டது.

'யாரோ ஒரு கழகத்தாராம். என்னமோ ஊர்வலம் ஒன்று நடத்தப் போகிறார்களாம். அதற்கு கூட்டம் எங்கே சேரப் போகிறது’ என்று அணாவசியமாக போலிஸ் அதிகாரிகள் நினைத்ததின் காரணமாக முதன்முதலில் இரண்டு போலிஸ்காரர்களே வந்தார்கள். ஒரு மைல் ஊர்வலம் வருவதற்குள் பெருகிய ஜனத்திர்ளைக் கண்டு கொழும்பின் பல்வேறு பகுதிகளில் வேலை பார்க்கும் போலிஸ் உயர்தர அதிகாரிகள் அனைவருமே ஊர்வலத் தைக் கண்காணிக்க வேண்டிய நிலையை நிர்ப்பந்தமாக எற்றுக்கொள்ள வேண்டியவர்களாய்விட்டார்கள். ஏன் நம்மைப் பிடிக்காத தோழர்களேகூட உணர்ச்சி வசப்பட்டு பராசக்தி பட்சே ஜெயவே வா! சிங்களம். (பராசக்தி கட்சி வாழ்க’) என்றனர். உணர்ச்சி ஒரு தொத்து நோயைப் போன்றது. நம்முடைய கருத்துகள் படிக்காத வர்கள்கூட சில நேரத்தில் தங்களையும் அறியாமல் கை தட்டி விடுவார்கள். இது இயற்கை. அவர்களுக்கும் என் நன்றி. நாங்கள் இந்தியாவிலிருந்து கொண்டுவந்திருக் கின்ற செய்திகள் இரண்டு ஒன்று-வடவரின் ஆதிக்கம்! மற்றொன்று-தென்னாட்டார் தேம்பல். ’இந்த இரண்டு’ செய்திகளின் அடிப்படையிலே எழும்பியதுதான் திரா