பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

இலங்கை எதிரொலி


விட நாட்டுப் பிரிவினைக் கோரிக்கை, தென்னகத்திலே வடவர் சுரண்டுகிறார்கள் என்று சொல்லும்போதே, இலங்கையில் தமிழர்கள் சுரண்டவில்லையா”. என்று ஒரு தோழர் கேட்டிருக்கின்றார். உண்மைதான் பணத்தை சுரண்டு பவர்களை தாராளமாக விரட்டட்டும். ஆனால் பால் சுரண்டுபவனை விரட்டாதே என்கிறேன். சுரண்டுதல் என்ற வார்த்தை வந்தவுடனே அதற்குப் பொதுவாக கொள்ளையடிப்பது என்ற கருத்துத்தான். அகராதியில் இருப்பதாக தோழர் தவறாக நினைத்துக்கொண்டிருக்கின்றார். அவர் அகராதியைப் பார்க்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர் தன் அறிவையாகிலும் கேட்டிருக்க வேண்டுமே. கொழும்புவின் மிகப் பெரிய மூலதனத்தேர்டு நடத்தப்படும் விலையுயர்ந்த வியாபாரங்கள் முப்பத்தி ஐந்து மார்வாரிகளிடம் அட்ங்கியிருக்கின்றதென்று தோழருக்கு தெரியாதென்று நினைக்கின்றேன். இன்று ஞாயிற்றுக்கிழமை வியாபாரத்துக்கு ஒய்வே தவிர வெளியே தொங்குகிற விளம்பரப் பலகைகளுக்கு ஓய்வில்லை. இந்த கூட்டம் முடிந்ததும் தோழர் கடைத் தெருவை ஒரு சுற்று சுற்றி வந்து பார்க்கட்டும், யாருடைய பெயர்கள் இருக்கின்றன என்பதை சில முஸ்லிம்கள் பெயரும், நம்மவர்கள் பெயரும் இல்லாமலில்லை. ஆனால் இங்கே வியாபாரத்தின் மூலம் பணம் சுரண்டுகின்றார்கள் என்ப தற்கும் இந்தியாவில் தென்நாட்டை வடநாட்டு மார்வாடிகளும் முல்தானிகளும் சுரண்டுகிறார்கள் என்பதற்கும் அதிக வித்தியாசமுண்டு. இங்கே இருக்கும் வியாபாரிகள் திறமையின் காரணத்தால் என்று வைத்துக்கொண்டால், தென்னாட்டிலே இருக்கும் வியாயாரிகள் மத்திய, சர்க்காரின் சலுகையால் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இந்தியாவில் நடக்கும் சர்க்கார் நம்மினத்தாரால் நடத்தப்படுவது என்ற நம்பிக்கை அவர்களுக்கிருப்ப்