பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பி.சிற்றரசு

13


தைப் போலவே சிங்கள சர்க்காரின் அபிமானத்தைப் பேற வேண்டுமென்பதற்காக, இங்கே மக்கள் குடி உரிமை பெற வேண்டுமென்பதற்காக நடத்திய போராட்டத்தில் மக்களுக்கு ஊக்கமளிப்பதற்குப் பதிலாக சர்க்காருக்கு ஊக்க மளித்தார்கள். அந்த 35 மார்வாடிகளின் உயர்வுக்கே ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை இலங்கைக்கு வந்து கொண்டிருக்கின்றது. அவர்களுக்கு ஏதாவது துன்பம் நேர்ந்தால் நேரு அவர்கள் இவ்வளவு ஆமை வேகத்தில் நடக் கமாட்டார். காஷ்மீர் பிரச்சினையை தீர்த்துவைக்க எத்தனைதரம் சென்றிருக்கின்றார், ஏன்? தான் பிறந்த நாடு. தன் இனத்தார் வாழும் களம். அந்த களத்தில் குருதிச் சிந்தக் கூடாதே என்பதற்காக பலமுறை அங்கே ஓடுகின்றார். இங்கே இலங்கை இந்தியர் காங்கிரசைத் தொடங்கி வைக்க 1939ல் ஒருமுறை வந்திருக்கின்றார். அதன் பிறகு அவர் இங்கே வரவில்லை. எந்த நேருவால் இலங்கை இந்தியர் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டதோ, அதே இலங்கை இந்தியர் காங்கிரஸ் சத்தியாகிரகத்தைத் தொடங்கி இரத்தம் சிந்திக்கொண்டிருந்தபோது நேரு கேட்டும் கவலை கொள்ளவில்லை. காரணம்: தடிய்டிப் பட்டவர்கள் காணாத தூரத்தில் காரில் கொண்டுபோய் விடப்பட்டவர்கள், காலை முதல் மாலை வரையில் சிறையில் அடைபட்டு குடிக்கத் தண்ணீர் கேட்டும் பெற முடியாமல் தத்தளித்தவர்கள் நேருவின் சந்ததியாரல்ல. ஆகவே அவருக்கு அவர்களைப்பற்றி கவலை பிறக்கவில்லை என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறோம் அதை வகுப்பு வாதம் என்கிறார்கள். முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறோம் வகுப்புகள் இருக்கும்வரை வாதம் இருந்து கொண்டுதான் இருக்கும். வகுப்புகள் ஒழிந்தால் வாதம் நிச்சயமாக ஒழிந்துவிடும். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். நீத மன்றத்தில் ஒரு வழக்கு எதுவரையில்