பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

இலங்கை எதிரொலி


நடத்துகொண்டிருக்கும் வழக்கு ஒரு முடிவுக்கு வரும் வரையிலும், நீதிபதியிடம் அந்த வழக்கு ஒரு தீர்ப்பைப் பெற்றுவிட்டால் பிறகு இந்த வழக்கைப்பற்றிய வாதப் பிரதீவாதங்கள் எழாது. எழக் காரணமுமில்லை. அதே போல் வகுப்புப் பூசல்கள் தலைவிரித்தாடிக் கொண்டிருக் கும்வரையில் அதைப்பற்றிய வாதங்கள் கிளம்பிக்கொண்டேதானிருக்கும். உள்ள நோயையறியாமல் வேறோர் மருந்தைக் கொடுத்து நோயாளியையும் சாகடித்து தன் மருத்துவத்தொழிலுக்கும் கெட்டபெயரைத் தேடிக் கொள்வதைப் போன்றவர்கள் அல்ல திராவிட முன்னேற்றக் கழகத்தார். ஆகவேதான் மற்றக் கட்சிகள் பேசப்படுகிற ஒன்றை நாம் எடுத்துப் பேசுகின்றோம். வகுப்புகளைப் பற்றி பேசினால் எங்கே கட்சி சீர்குலைந்துவிடுமோ என்று பயந்துகொண்டு நாளுக்கு நாள் அருகிற்போய்க்கொண்டிருக்கும் ஒரு கட்சியின் கண்முன்பாவேயே வகுப்புகள் ஒழியவேண்டுமென்று பேசிப் பேசி வளர்ந்துகொண்டிருக்கிறோம்! இந்த இரண சிகிச்சையை செய்ய அவர்களுக்கு பயமாயிருந்தால் எங்களிடம் பழகிக்கொள்ளலாம். பழகிக்கொள்ள இஷ்டமில்லையானால் சும்மாயிருந்துவிடலாம். அவர்கள் இதை எல்லாம் செய்வதை விட்டுவிட்டு எங்களிடம் குறை காண்பதிலேயே அவர்கள் கட்சியை வளர்த்துவிடலாம் என்பது பெரிய மரத்தின் நிழலிலே பயிரினங்களை வளர்க்க நினைப்பதைப் போன்றதாகும். மர நிழலில் பயிரினங்கள் வளர்வதில்லை என்ற தாவர நுட்பத் தை யறியாதவர்கள்தான் நமது போக்கைக் கண்டிக்க முன்வந்திருக்கின்றனர். அவர்களை அவர்களுடைய தவறான போக்கிலேயே விட்டு நாம் நம் பணியினை மேலால் நடத்திச் செல்வோம். கட்சிகளை வளர்ப்பது என்ற கவலையைவிட இங்கே கஷ்டப்படும் மக்களுக்கு எப்படி நிவாரணம் தேடித்தரலாம் என்பதில் பலகட்சிகளுடைய ஏகோ