பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

இலங்கை எதிரொலி


குடி உரிமையும் வழங்க மறுக்கிறது. தொழில் மேலும் செழிக்கவேண்டூமானால் வெளிநாட்டாரை அனுமதிக்கலாம், அதையும் செய்வதில்லை. ஏன்இந்த மூன்று நிலமைகளை ஒன்றாக்கிப் பார்த்தால் சர்க்காரின் பரிபூரணமான வஞ்சனைவடிவம் பளிங்குபோல் தெரிகின்றது. இங்கிருந்து எட்டு லட்சம் தமிழர்களை வெளியேற்றினால் ரப்பர் பாலையும், தேயிலைக் கொழுந்தையும் எடுக்கமுடியாது. அதன். பேரால் சர்க்காருக்கு இன்று ஆண்டுதோறும் கிடைத்துக் கொண்டிருக்கும் 85 சதவிகிதம் வருமானம் கிடைக்காது. ஆகவே இவர்களைவெளியேற்ற முடியாது. ’சரி, இங்கேயே இவர்களுக்குக் குடி உரிமை வழங்கினால் என்ன என்று நினைக்கின்றது சர்க்கார் அடுத்தபடியாக-குடி உரிமை வழங்கினால் ஒட்டுரிமை வழங்கவேண்டும். அப்படிச் செய்வோமானல் அவர்களுக்கென்று பல பிரதிநிதிகளை சட்ட சபைக்கு அனுப்பி அவர்க்குச் சாதகமான சட்டங்களைச் செய்துகொண்டால் என்ன செய்வதென்று பயப்படுகிறது. வெளிநாட்டிலிருந்து வருகின்றவர்களை ஏன் தடுக்கிறது. இப்போதே இலங்கையில் இருக்கும் 85 இலட்சம் ஜனத்தொகையில் 25 இலட்சம் பேர்கள் இந்தியர், திராவிடர், யாழ்ப்பான தமிழர்கள். ஆண்டுதோறும் வெளியாரை இங்கே குடியேற்றினால் இங்கே சிங்களவர்களல்லாதவர்கள் 45 இலட்சத்துக்கு மேலாய்விட்டால் மெஜாரிட்டி மைனாரிட்டி கேள்வி பிறந்தால் என்ன செய்வது என்ற அச்சமும் உடனே பிறந்துவிடுகின்றது. இந்த திரி சூலத்தின் தாக்குதலால் திண்டாடிக்கொண்டிருக்கின்றது. என்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக சுமத்துகிறோம். சர்க்காரை இதற்கு நேரடியான பதில் சொல்லமுடியாவிட்டால் சர்க்காரை ஆதரித்து நிற்கும் U.N.P. 'கட்சி (ஐக்கிய தேசிய கட்சி) பதில் சொல்லுமா?