பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பி.சிற்றரசு

17


அடுத்தது நாங்கள் மதங்களைப்பற்றி என்ன நினைக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ளாமலே மண்டபத்தின் ஒரு மூலையில் யாரோ ஒரு முஸ்லீம் தோழர் குர்ஆணைப்பற்றிப் பேசாதே என்று கூச்சல் எழுப்புகிறார். குர்ஆணைப்பற்றி நான் ஆதரித்துப்பேசக்கூட விடமாட்டார்போலிருக்கிறது தோழர். அவ்வளவு மதப்பித்தேறிய தோழர் மத சம்மந்தமான ஆராய்ச்சிகள் நடக்கும் இடத்துக்கு வந்திருக்கக்கூடாது. அக்பருக்கு உதவிசெய்து அலுத்துப்போன பைராம்கானைப்போல மெக்காவுக்குச் சென்றிருக்கலாம். ஏனெனில் அங்கேதான் பலமத மக்கள் இல்லை. மத ஆராய்ச்சிகள் நடப்பதில்லை. கண்டிப்பாக நம்புவது தவிர வேறு மார்க்கமில்லாத இடம். தோழர் எங்களிடத்திலே அதை எதிர்பார்க்கக் கூடாது. இதுவரை இந்து கோயில்களைப்பற்றியும் சிலை வணக்கத்தைப்பற்றியும் பேசிக்கொண்டிருக்கும்போது வஹீவோ பகுத் அச்சாஹே, என்று தலையையாட்டிக் கொண்டிருந்தவர் இன்று நாங்கள் கு என்ற எழுத்தை உச்சரிப்பதற்குமுன்னே குர்ஆன்என்று நினைத்துக்கொண்டு குதிக்கிறார். தோழரே, குர்ஆன் ஆண்டவனால் ஆகாயத்திலிருந்து இறக்கப்பட்டதென்கிறாய். ஆயிரத்திநானூறு ஆண்டுகள் அதன் வயதென்கிறாய். இதுவரை யாராலும் அழிக்கமுடியவில்லை என்கிறாய். அப்பேற்பட்ட வல்லமை வாய்ந்ததாக நீர்நம்பும் குர்ஆனே நான் ஒருவன் தாக்குவதினால் பொடிப்பொடியாய்விடும் என்று நீர் நினைத்தால் உம்மைப்போன்ற கோழையை முஸ்லீம் இனத்திலேயே பார்க்கமுடியாது. இவைகள் பனங்காட்டு நரிகள், இந்த சலசலப்புக்கு அஞ்சாது என்பதை நீர்,மனதில்வைக்க வேண்டும். உங்கள் மீலாது சீரத்துகளிலும், பாகிஸ்தான் பிரிவினையிலும் பெருவாரியாக கலந்துகொண்ட எங்களிடமே இந்த கைவரிசையைக் காட்டவேண்டாமென