பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

23


இப்போது இங்கே திராவிட முன்னேற்றக் கழகத்தின் துவக்கவிழாவை ஆற்றியிருக்கின்றோம். என்றால் இந்தியாவின் தென்பகுதியில் சற்றொப்ப ஆறு கோடி மக்களின் நல்வாழ்வுக்காக தனியாட்சிவேண்டும், என்று இடைவிடாது போராடிக்கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் முடிவான கொள்கையை நாங்கள் ஆதரிக்கிறோம் என்பதுமாத்திரமல்ல. அதன் வளர்ச்சிக்கு எங்களாலான உதவியை நாங்கள் இங்கிருந்தபடியே தருவோம் என்பதும், தலைமை நிலையம் அவ்வப்போது இடுங்கட்டளைகளை ஏற்று அதன்வழி நடப்போம் என்ற உறுதியை எடுத்துக்கொள்ளும் அறிகுறியாகவே இந்த முயற்சியில் நாம் அனைவருமே ஈடுபட்டிருக்கின்றோம்.

இதில், இந்தியாவிலிருந்து ஒருபகுதியைத் தனியாக பிரிப்பது நல்லதா என்ற சந்தேகமும், பலம்பொருந்திய மத்திய சர்க்காரை பகைத்துக்கொள்வது நல்லதா என்ற சந்தேகமும், இந்தியமக்கள் என்ற ஒரே பட்டியலில் அடங்கிவிட்டமக்கள் கூட்டத்திலிருந்து ஒரு பகுதியினரைத் தனியாகப்பிரித்து அவர்களைத் திராவிடர்கள் என்றழைப்பது சரியா என்பதும், ஆரியமும் திராவிடமும் இன்னுமா ஒன்றாகக்கலந்துவிடாமல் தனித்தனியாக இருக்கின்றது என்ற சந்தேகமும், திராவிடம் தனியாகப் பிரிவதின்மூலம் தனக்குத்தானே தனியாட்சி நடத்தப் போதிய அளவுக்கு அதனிடம் பொருளாதாரத்திட்டம் இருக்கின்றதா என்ற ஐயமும் கலாசாரத்துறையில் நாட்டுப்பிரிவினை விரும்பத்தகுந்ததா என்ற வினாவும் ஆங்காங்கே எழுப்பப்படுகின்றது. இந்த ஐயப்பாடுகள் ஒவ்வொரு பகுதியும் தனியாக பிரிந்துசெல்லவேண்டும் என்ற போது எழும்பிய பிரச்சினைகள் தாம்.

நம்மைப்பார்த்து உங்கள் திராவிட நாட்டுக்கு எல்லை எது என்று கேட்கின்றவர்களைப்பார்த்து நானும் ஒரு