பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

இலங்கை எதிரொலி


கேள்வியைக்கேட்கின்றேன். இந்த என் கேள்விக்கு அவர்கள் அளிக்கும்பதிலிலேயே திராவிடத்தின் எல்லைக் கோடும் அடங்கியிருக்கின்றது என்ற தெளிவான முடிவுக்கு அவர்கள் வந்தே தீருவார்கள். பர்மா பிரியாத போதும் பர்மா உள்ளடங்க இருந்த நிலப்பரப்புக்குப் பெயர் இந்தியாதான். பர்மா பிரிந்தபிறகும் இந்தியாதான் பாகிஸ்தான் பிரியாததற்குமுன்பு பாகிஸ்தான் பகுதிகள் உள்ளடங்கியபோதும் இந்தியாதான். பாகிஸ்தான் பிரிந்தபிறகும் இந்தியாதான், காஷ்மீரம் அசோக சக்கரம் ஏந்தியிருந்தபோதும் அந்த பகுதிகள் உள்ளடங்க இந்தியாதான். இப்போது காஷ்மீரம் தனிக்கொடியேற்றி சட்டங்கள் அமைத்துக்கொண்டு, இந்திய யூனியனில் சேர்ந்த மக்கள் அந்த நாட்டை வேடிக்கைப்பார்க்க தற்காலிகமாக வந்துபோகலாமேயன்றி, அங்கே (காஷ்மீரத்தில்) வாணிபச்சலுகைப்பெறுவதோ, இடங்களை வாங்குவதோ, குடி உரிமைப்பெறுவதோ, காஷ்மீர சர்க்காரின் உத்திரவில்லாமல் உள்ளே வருவதோகூடாது என்று சொல்லிவிட்டபிறகு. காஷ்மீரம் தனி நாடுதானா' என்ற கேள்விக்கு பிரதமர் நேரு பதிலளிக்கவேண்டுமென்று சட்ட சபையில் கேட்கப்பட்ட கேள்விக்கு நேரு தலை சொரிந்துகொண்டே காஷ்மீரம் தனி நாடுபோலத்தான் என்று இழுத்தவண்ணம் பதிலளித்திருக்கின்றார். இந்த நிலையில் காஷ்மீரப்பகுதிகள் துண்டாக தனியாக்கப்பட்ட பிறகும் இந்தியாதான். ஆக இந்த மூன்று பகுதிகளும் பிரிந்தபிறகும் எஞ்சியிருக்கும் பகுதிகளை இன்னும் இந்தியாதான் என்று சொல்லிக்கொண்டு வருகின்றார்கள். இனி திராவிடம் பிரிந்தபிறகும் இந்தியா என்றுதான் சொல்வார்கள். இன்னும் பல்வேறு பகுதிகள் பிரிந்து நேருவின் மாளிகை ஒன்றுமட்டிலும் தனியாக நின்றாலும் அந்த ஒரே மாளிகை இருக்கும் இடத்தைமட்டிலும்