பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பி.சிற்றரசு

25


இந்தியா என்றுதான் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அன்ருடம் தேய்ந்துவரும் இந்திய எல்லையையே நிர்ண யிக்கமுடியாதிருக்கும்போது, திராவிடத்தின் எல்லையைத் தெரிந்துகொள்ளவேண்டுமென்ற அவசரந்தான் நமக் கெதற்கு என்று தோழர்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்கவேண்டும். ஒரு நாடு பிரிவதற்குமுன்னுல் அதன் எல்லையை நிர்ணயிக்க எல்லைக்கமிஷன் ஒன்றையனுப்பி அதைத் தீர்மானிப்பார்கள். அப்படி அவர்கள் வந்து திட்டம் திட்டுகிறபோது ஒரு பத்து மைல் கூடின லென்ன, குறைந்தாலென்ன. பிரிந்த எல்லைக்கோட்டுக் கப்பாலுள்ள மக்கள் திராவிடத்தோடு இணைந்திருந்தால் தான் நல்லது என்று அவர்கள் நினைத்தால் அவர்களாகவே போராடி எல்லேக்கோட்டைத் தங்கள் ஊர்களோடு சேர்த்து இழுத்துவிடுகின்ருர்கள். சாதாரணமாக இந்தியா விலிருந்து என் இங்கேவந்தார்கள். அங்கே ஜன நெருக் கடியில், வேலையில்லாத்திண்டாட்டத்தில் கஷ்டப்படு வதைவிட, கடல் கடந்து சென்ருயினும் காலத்தை கழிக் கலாம் என்று பல லட்சம்பேர்கள் இங்கே குடியேறி யிருக்கவில்லையா, அதேபோல் எந்தநாடு சுபீட்சமாக இருக்கின்றதென்று மக்கள் உணர்கிருர்களோ அந்த நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ளவே நினைப்பார்கள்.

இங்கேவந்தவர்களாகிலும் தன்னம்பிக்கையையும் பலத்தையும் நம்பி இங்கேவந்து காலைமுதல் மாலைவரை கஷ்டப்பட்டு வாழ்கிருர்கள். இந்தியா செழிப்பான நாடு என்றறிந்தவுடன் ஆரியர்கள் தங்கள் ஆடுமாடுகளே ஒட்டிக்கொண்டு இந்தியாவுக்கு வந்து குடியேறி பிச்சையெடுத்து வாழ்ந்து இன்று அதிமேதைகளென தம் பட்டம் அடித்துக்கொண்டு அரசியல் லகானைக் கையில் பிடித்துக்கொண்டு மற்றவர்களையடக்கியாளவில்லையா.