பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

இலங்கை எதிரொலி


அதேபோல் திராவிட மக்கள் தங்களுக்குச் சொந்தமாயில்லாத நாட்டை அக்ரமமாக ஆக்ரமிக்க எண்ணவில்லை. தங்கள் மூதாதையர்கள் பிறந்த நாட்டை, தங்கள் முன்னேர்கள் ஆண்ட நாட்டை, உலகப் படத்தில் 'திராவிடம்' என்று பெயர் பெற்றிருக்கும் நாட்டை, உலகத்திலேயே தலைசிறந்து விளங்கிய ஐந்தாறு இனங்களில் ஒன்றான திராவிட இனம் வாழ்ந்த நாட்டைத் தனியாகக் கேட்கின்றது. இது பொறாமையின் விளைவால் உதித்த எண்ணம் என்று யாரும் பழிசுமத்திவிடமுடியாது. அப்படிச் செய்ய நினைப்பவர்கள் யாரோ அவர்களே பொறாமையின் சேய்கள்,பொல்லாங்கின் தலைவர்கள். அவர்களைப் பற்றியோ, அவர்களின் செயல்களைப் பற்றியோ என்றும் திராவிட முன்னேற்றக் கழகம் கவலைப்பட்டதில்லை. அதற்கு நேரமும் இல்லை. ஆகவே அதற்கு எதிர்ப்புகளைப் பற்றி யாரும் கவலைப்படவேண்டாம் என்று தெரிவித்துக் கொள்ளுகின்றேன். ஒரு இயக்கம் வளர்ச்சியடைகிறது என்பதற்குள்ள நல்ல அறிகுறி பல பாகங்களிலிருந்து எதிர்ப்பு கிளம்புவதுதான். அந்த ஒரு அளவு கோலை கொண்டுதான் நாம் நமது இயக்க வளர்ச்சியைக் காண முடியும். போர் வீரன் தன் மேல் பட்ட காயத்தில் சொட்டும் குருதியைக் கண்டு கலங்கமாட்டான். எதிரியின் குருதியைக்கண்டும் அவன் மயக்கமடித்துச் சாய்வதில்லை, தோல்வியே கண்டு அவன் மாள்வதானாலும் ரணகளத்திலேயே மாள்கிறோம் என்ற ஆறுதலின் பேரிலேயே புன்னகையோடு சாவைத் தாவுகிறான்.அதே போல் திராவிடம் பிரிய நாம் மாள்வதானாலும் நம் மண்ணிலேயே மாண்டோம் என்ற ஆறுதலோடு இருப்போம், வேறு நாட்டின் மண்ணாசைகொண்டு அன்னியர்மேல் படையெடுத்து ஆக்ரமிப்பாளன் என்ற அநீதியாான பெயரைத் தாங்கி அனாதைப் பிணமாவதல்ல நமது நோக்கம். எந்த மண்ணில்