பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

29


உட்காரவைத்துக்கொண்டு பேச்சைத் தொடங்கினார். நான் பேச மறுத்துவிட்டேன். ஏனென்றார், 'என்னைமட்டிலும் தனியாக வரச் சொன்னீர்கள், தனியாகப்பேசவேண்டு மென்று கேட்டிருந்தீர்கள். நாம் இருவரும் பேசுவது வெளியில் தெரியாமல் இருக்கவேண்டும் என்பதுதானே உங்கள் நோக்கம். அப்படியானால் இவர்களைமாத்திரம் ஏன் சேர்த்துக்கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்டேன். நாம் பேசுகிற எதையும் இவர்கள் வெளியே சொல்லமாட்டார்கள் என்றார். அப்படியானால், என்னோடு வருகின்றவர்கள் மாத்திரம் நமது பேச்சை வெளியே சொல்லிவிடுகின்ற அளவுக்கு அயோக்கியர்கள் என்று தீர்மானித்துவிட்டீர்களா என்றேன். அவரால் ஒன்றுமே பதில் சொல்ல முடியவில்லை. பிறகு ஒரு அறையில் தனியாக உட்கார்ந்து பேசினோம். திராவிடநாட்டுப் பிரிவினைத் தொடர்பாக அவர் கேட்கக்கூடும் என்று நினைத்தேன். ஆனால் அவர் முதல் முதல் கேட்டது. மூணறை யாண்டுகளில் இவ்வளவு வேகமாக வளர்த்திருக்கின்றீர்களே, இதை எப்படி செய்துமுடித்தீர்கள். ஒரு கழகம் வளர என்னென்ன முறைகளைக் கையாளவேண்டும். அதைச் சொல்வீர்களானால் நாங்களும் எங்கள் கட்சியை, உங்கள் அளவுக்கு வளர்க்க முடியாவிட்டாலும், ஒரு பாதி அளவாவது. வளர்க்க வசதியாக இருக்கும் என்ருர், பிறகு ஒரு கட்சி வளருவத்ற்குள்ள எல்லா முறைகளையும் சொன்னேன். அப்படி நான் சொல்லியவற்றில் இரண்டோர் முறைகள் அவரால் அல்லது அவருடைய கட்சிக்காரர்களால் எப்போதுமே பின்பற்றமுடியாது. எப்படியாகிலும் முயன்று வளர்த்துவிடுவேன் என்று தன்னைத்தானே உறுதிப்படுத்திக் கொண்டார். இதை ஏன் இங்கே குறிப்பிடவேண்டி வந்ததென்றால் ஒரு இயக்கத்தின் வளர்ச்சிக்கு பணமும் பத்திரிக்கையுமே போதுமென்ற தோழர்கள்-பணம் பத்திரிக்கை