பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சி.பி.சிற்றரசு

31


போடு கேட்டுக்கொண்டிருந்தார்கள். கேள்வித்தாள் ஒன்று கொடுத்து, மறுபடியும் அதைத் திருப்பி வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள். காரணம், நாம் அந்த கேள்விக்குப் பதில் சொல்வதின்மூலம் அவர்கள் குட்டு வெளிப்படும் என்ற பயத்தால் இப்படிச் செய்தார்கள் என்று பின்னால் விளங்கியது.]

தலைவர் அவர்களே! தோழர்களே! வணக்கம். மழையிலே நின்றுகொண்டிருக்கிருேம். மழை எப்போதும் வரும், வெய்யல் எப்பொதும் வரும் என்று நிச்சயமாக சொல்லமுடியாத அளவுக்குகடல்மட்டத்திலிருந்து2500 அடிகள் உயர்ந்த ஊர். சிங்கள மன்னர்களின் தலைநகரம். கடைசி மன்னராகிய விக்ரம ராஜா சிங்காவோடு முடியாட்சியை முடித்துவிட்ட நகரம். அவருடைய பேரன் திரு. யோகாநந்த ராஜா சிங்கா என்பவர்கூட இங்கே இல்லாமல் இந்தியாவுக்குச் சென்று அங்கேயே ஒரு அம்மையைத் திருமணம்செய்துகொண்டு தக்காண பீட பூமியில் மங்கிராபாத் என்ற ஊரில் குடியிருக்கின்றார் என்று வரலாறு சொல்லுகிறது. உலகத்திலேயே எ ங் கு மி ல் லா த அ தி ச ய ப் பூந்தோட்டமான பேராதனியா பூந்தோட்டத்தின் அருமையான காற்று வீசியவண்ணம் இருக்கின்றது. மேலும் சிவனடிப்பாதத்தில் தோன்றி திருகோணமலையில் முடியும் மகாவலி கெங்காவும் இந்த அழகு நகரை ஒரு சுற்றுசுற்றி ஒடிக்கொண்டிருக்கின்றதென்றால், இவ்வளவு இயற்கை அழகும் எழிலும் நிறைந்த நாட்டில் வாழும் நீங்கள் இவ்வளவு கொடிய மழையிலும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வமும் அரசியல் நுணுக்கமும் வந்தது இயற்கைதான். இந்த இடத்தில் எள்ளளவும் சிந்தனையில்லாதவனுக்கும் சிந்தனைத் தோன்றும் என நம்புகிறேன்: