பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

இலங்கை எதிரொலி


மனிதனுடையத் தொடக்கச் சிந்தனக்கும் இன்று. வளர்ந்திருக்கும் அவன் சிந்தனைத்கும் இடையிலே எவ்வளவு அற்புதமான மாறுதலைச் செய்திருக்கிறான் என்பதைப் பார்க்கும்போது உலகம் வியப்பின் விளிம்பிலே நின்று கொண்டிருக்கின்றது.

தனக்கென்று ஒரு குறிப்பிட்ட இடமில்லாமல் காட்டில் கண்ட கண்ட இடங்களில் திரிந்து, உண்பதற்கு இன்ன வேளை, உண்பது இன்னதுதான் என்ற முடிவில்லாமல், கிடைத்த நேரத்தில் கிடைத்ததை சாப்பிட்டுக் காலம் கழித்துக்கொண்டு வந்தான். பிறகு வந்தவன். நாம் எங்கே சுற்றினாலும் தங்குவதற்கு ஒரு இடம் என்றிருந்தால்தான் நாம் உண்ட மிகுதியான இறைச்சியை, காய்கனிகளை வைத்துக்கொள்ளலாம் எனக்கருதி ஒரு இடத்தைத் தனக்கென்று ஏற்படுத்திக்கொண்டான் மழையிலும் வெய்யலிலும் தொல்லைப்படாமலிருக்க சுற்றிலும் இலைகள், மேலே கிளைகளால் மூடப்பட்ட ஒரு கூடாரமாக்கிக்கொண்டான். இரண்டு நாள் மூன்று நாட்களுக்கு முந்தியே கொண்டுவரப்பட்ட இறைச்சி அழுகி நாற்றமெடுக்கவே, எப்படியோ யூகத்தால் நெருப்பிலே பொசுக்கிவைத்துக் கொண்டான். பொசுக்கியதை அவன் தன்னுடைய இரண்டு மூன்று நாள் ஆகாரமாக வைத்துக்கொண்டான். காடுகளில் சுற்றியலைவது அவனுக்குக் கொஞ்சம் கடினமாகத் தெரியவே என்ன செய்யலாம் என்று யோசித்தான். அதே நேரத்தில் ஒரு கிளைமானின்மேல் காகம் ஒன்று உட்கார்ந்திருப்பதைக் கண்டான். ஓகோ. பலமுள்ள ஒன்றன்மேல் பலமில்லாத ஒன்று சவாரி செய்யலாம்போலிருக்கின்றது என்று நினைத்தபிறகுதான் தன்னைக்கொல்லாத தன் சொல்வழி நடக்கும் பிராணிகளைப் பிடித்து கொஞ்சம் கொஞ்சம்