பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

இலங்கை எதிரொலி


னும் பலர் இந்திய சமுதாயக் கொடுமைகளை வண்மையாகக் கண்டித்திருக்கின்றனர். அவர்கள் ஆதிக்கபுரியினர் ஆத்திரம்கொண்டனர். நோயைக் கண்டுபிடித்து சொன்ன டாக்டருக்கு நன்றி சொல்லி-நோயைக் குணப்படுத்தும் வழிவகைகளைக் காணாமல், நோயைக் கண்டுபிடித்துச் சொன்ன டாக்டர் மேல் கோபித்துக்கொள்வது எவ்வளவு பைத்தியக்காரத்தனமோ அதைவிட மிக பைத்தியக்காரத்தனமாகும். நமது ஊழலை எடுத்துச் சொன்னவர்களைக் கண்டிக்க முற்படுவது. ஆகையாலேதான் இதுவரை இந்தியாவில் தோன்றிய எந்தக்கட்சியும் செய்யாத சீர்திருத்தப் பணியை நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம். அதற்காக நாடு எங்களை பாராட்டியிருக்கவேண்டும். பகுத்தறிவு இல்லாத காரணத்தால் பகைக்காட்டுகிறது. நல்ல கொள்கையில் தொடக்கத்தில் இப்படித்தான் தொல்லைக்குள்ளாகும் என்ற உலக உண்மைக்கண்ணாடியில் பார்த்து ஆருதல்பெற்ற நாங்கள் அயராமல் இந்த பணியைத் தொடர்ந்து செய்துக்கொண்டு வருகிறோம். வருங்கால நன்மைக்கு உகந்தான பணியை மேற்கொண்டு நீங்களனைவரும் ஒத்துழைப்பீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். ஆகவே சமூகத்துறையில் இந்தக் கொள்கையும் அரசியல் துறையிலே நாட்டுப் பிரிவினைத் திட்டமும் வைத்துக்கொண்டிருக்கின்றோம். நாடு பிரிந்த பிறகு சமுதாய சீர்திருத்தத்தை சட்டத்தின்மூலம் செய்துவிடக்கூடியதா என்று பலர் கேட்கின்றனர். அவர்கள் அப்படி நினைப்பதில் வியப்பில்லை. ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக ரத்தத்தோடு கலந்துவிட்டிருக்கும் மூடப்பழக்கங்களை திடீரென சட்டத்தின்மூலம் முறியடிப்பதைவிட கொஞ்ச கொஞ்சமாக மக்கள் மனதிலே இருந்து அகற்றி விட்டால், பிறகு சட்டம் செய்கிறபோது மக்கள் அதிர்ச்சிகொள்ளமாட்டார்கள். ஏனெனில் நாம் யார்என்