பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பி.சிற்றரசு

39


பதும் நம்மிடம் ஆட்சிவந்தால் என்ன நடக்கும் என்ப தும் அவர்கள் நன்ருக.உணர வாய்ப்பையும் தந்துவிடுகி ருேம். இதனுல் நமக்கு இரண்டுவித நன்மைகள் ஏற்படு கின்றது. ஒன்று:-ஒரு கருத்தைப் பலமுறை கேட்டுக் கேட்டு சிந்திப்பது. மற்ருென்று, பிற்காலத்தில் நாம் சட் டத்தின்மூலம் செய்யப்போகும் சீர்திருத்தத்தைக்கண்டு சீரிவிழாமல் இருப்பது ஆகவே இரண்டு விதகுறிக்கோளைக் கொண்டுதான் இந்த முறையைக் கையாளவேண்டியவர் களானேம். இன்னமும் சொல்லுவோனுல் இன்னமும் ஒரு கருத்து அடங்கியிருக்கின்றது. மதக் கோட்பாடுகளை யும் மூட பழக்கவழக்கங்களையும் ஒரே நாளில் இத்தனை கோடி மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு நாட்டில் தோன்றிய மதத்தை அந்த நாட்டில் வாழ்ந்த மக்கள் மாத்திரம் ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்மறையான இரு வித மதக்கோட்பாடுகளை ஒரே வீட்டில் ஒரு தாய்க்குப் பிறந்த அண்ணன் தம்பிகள் இருவரும் இருவித மதங் களே எற்றுக்கொண்டார்கள். இந்த உலகத்தின் ஆசையிருந்தவர்களுக்கு இந்த உ ல க த் தி லே யே மேலான பதவிகள் என்று கருதப்பட்ட குருக்கள், ஞானி கள், இருடிகள், தருமகர்த்தாக்கள் என்ற பட்டம் அளிக்கப்பட்டது. அந்த உலக ஆசையிருந்தவர்களை இந்த உலக ஆசையை நீக்கி அந்த உலகத்துக்குப் போவதான மார்க்கத்தைத் தேடச்செய்தது, இந்த முறை யில் ஏற்பட்ட மதக்கோட்பாடுகள் அபினிப் போதைப் போல், மதுபான வெறிபோல் மக்கள் சமுதாயத்தையே சூழ்ந்துக்கொண்டது. இதனுல் ஒரு சிலருக்குத் தவிர யாருக்கு என்ன நன்மை ஏற்பட்டது என்பதை யோசித் துப் பாருங்கள். கையிலிருந்த காசை கடவுள் தரகருக் குக் காணிக்கையாகச் செலுத்தி, வாழமுடியாமல் திண் டாடி தெருவில் நின்று, இறுதியில் பிச்சைக்காரணுய்,