பக்கம்:இலங்கை எதிரொலி.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

இலங்கை எதிரொலி


கொள்ளைக்காரனாய், கொடியவனாய், திருடனாய், சிலர் போனது தவிர வேறு நன்மை யொன்றும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. மத்தியதர வகுப்பாரும், பணக்காரர்களும் ஆண்டவன் பேரைச் சொல்லி அண்டை அயலாரை சுரண்டிக்கொடுக்க உதவியதேயன்றி வேறு என்ன நன்மை செய்திருக்கின்றது என்பதை நாம் சிந்தித்தாக வேண்டும். ஆகவேதான் எந்த கோட்பாடுகள் மக்கள் நல்வழிபடுத்துவதற்குப் பதிலாக தீய வழியில் அழைத்துச் சென்றிருக்கின்றதோ, அதை மக்களுக்கு எடுத்துக்காட்டி திருந்தச் செய்வதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சமுதாய சீர்திருத்த வேலைகள் என்றும், தனி நாடு பிரிவதே அதன் அரசியல் கொள்கை யென்பதும், அதற்கு இதுவரை தந்த விளக்கங்களின்மூலம் நீங்களனைவரும் ஓரளவுக்காவது புரிந்துக்கொண்டிருப்பீர்கள் என்று திடமாக நம்பி, புரிந்த ஒன்றை புறக்கணிக்காமல் இந்த நன்னோக்கங்கள் மேலும் மேலும் வளர உங்கள் பேராதரவைத்தாருங்கள் என்று கேட்டுக்கொண்டு என் உரையை முடித்துக்கொள்கின்றேன். வணக்கம்.

28-4-53 பண்டாரவளை என்ற ஊரில் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு.

தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே. இங்கே ஒரு தமிழ் பேராசிரியர் தலைமை தாங்கியிருக்கின்றார். அவர் எங்களை இங்கே பேச அழைத்ததைவிட வேறு இடங்களுக்கு தனியாகப் பேச அழைத்திருக்கலாம். ஏனெனில் நாங்கள் இருவம் தனியாக சந்தித்து எது வேண்டுமானாலும் பேசியிருக்கலாம். இங்கே எங்களை அழைத்தது அதுவும் நாங்கள் எந்த கொள்கையுடைய கட்சிக்காரர்கள் என்று நன்றாக புரிந்துகொண்டு அரசியல் சமூக இயல் மதயியல் ஆகிய மூன்றைப்பற்றியும்